Indian Railways: ரயில் டிக்கெட் முக்கிய அப்டேட்.. புதிய வசதி.. குஷியில் பயணிகள்!!

Indian Railways: தினமும் ரயிலில் பயணம் செய்பவர்கள் அல்லது திட்டமிடப்படாத பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இதனால் நன்மை கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2023, 02:07 PM IST
  • யுடிஎஸ் செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.
  • UTS ரயில் டிக்கெட் முன்பதிவு வகைகள்.
  • UTS மொபைல் டிக்கெட் செயலியைப் பயன்படுத்துவதற்கான சில அடிப்படை விதிகள்.
Indian Railways: ரயில் டிக்கெட் முக்கிய அப்டேட்.. புதிய வசதி.. குஷியில் பயணிகள்!! title=

ரயில் டிக்கெட்: இந்தியன் ரயில்வேயின் ரயில்களில் பயணம் செய்வது மிகவும் எளிதானது. அதே நேரத்தில், ரயில்வேயில் பயணம் செய்ய செல்லுபடியாகும் டிக்கெட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம். பல சமயங்களில் அவசரமாக ரயிலைப் பிடித்து சாதாரண பெட்டியில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கினால், அபராதமும் விதிக்கப்படுகிறது. இதற்காக, ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை (Unreserved Train Ticket) முன்பதிவு செய்யலாம்.

ரயில்வே டிக்கெட்

முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, மக்கள் தங்கள் தொலைபேசிகளில் UTS பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும். UTS பயன்பாட்டின் உதவியுடன், ஜெனெரல் கோச்களுக்கான டிக்கெட்டுகள் அல்லது பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை மக்கள் ஆன்லைனில் வாங்கலாம். UTS டிக்கெட் முன்பதிவு ரயில்வே பயணிகளின் பயண அனுபவத்தை எளிதாக்கும். குறிப்பாக தினமும் ரயிலில் பயணம் செய்பவர்கள் அல்லது திட்டமிடப்படாத பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இதனால் உதவி கிடைக்கும்.

ரயில் டிக்கெட் 

எதிர்பாராத பயணம் ஏற்படும் போது, ​​முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை பெற, ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்பது கடினமாக இருக்கும். மேலும், கூட்ட நெரிசலில் சரியான நேரத்தில் ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் இந்திய ரயில்வேயின் யுடிஎஸ் மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, முன்பதிவு செய்யப்படாத, பிளாட்பாரம் மற்றும் அனைத்து ரயில்களுக்கும் சீசன் டிக்கெட்டுகள் போன்ற சில ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எளிதாகி விட்டது.

UTS டிக்கெட் புக்கிங்

UTS டிக்கெட் புக்கிங் ரயில்வே பயணிகளின் பயண அனுபவத்தை எளிதாக்கும். குறிப்பாக தினமும் ரயிலில் பயணம் செய்பவர்கள் அல்லது திட்டமிடப்படாத பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இதனால் நன்மை கிடைக்கும். இந்த செயலியைப் பயன்படுத்த, பயணிகள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி செயலியில் தங்களைப் பதிவு செய்து கடவுச்சொல், அதாவது பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். பதிவு செய்தவுடன், அவர்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். டிக்கெட் கிடைப்பதை சரிபார்க்கலாம் மற்றும் ரயில் அட்டவணையைப் பெறலாம். தேவைப்பட்டால், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யவும், அதாவது கேன்சல் செய்யவும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: தூங்கும் நேரம், விதிகளில் மாற்றம்.. பயணிகளுக்கு ஷாக் 

யுடிஎஸ் செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை: 

- முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் செயல்முறை (Unreserved Ticketing System - UTS) இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) மூலம் 2014 இல், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை உருவாக்கவும் ரத்து செய்யவும், சீசன் டிக்கெட்டுகளை பதிவு செய்யவும், பாஸ்களைப் புதுப்பிக்கவும் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை வாங்கவும் தொடங்கப்பட்ட ஒரு மொபைல் செயலியாகும். 

- இந்த முயற்சியானது, உள்ளூர் ரயில் பயணம் அல்லது பிளாட்ஃபார வருகைகளுக்காக அச்சிடப்பட்ட அட்டை டிக்கெட்டுகளை (PCTs) வாங்க நீண்ட வரிசையில் நிற்பதில் இருந்து பயணிகளை காப்பாற்றுகிறது.

- அடிக்கடி பயணம் செய்யும் மற்றும் எதிர்பாராத விதமாக எங்காவது செல்ல வேண்டிய பயணிகளுக்கு இது பயனளிக்கிறது.

- யுடிஎஸ் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் தொடர்புடைய ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய இலவசமாக கிடைக்கிறது.

UTS ரயில் டிக்கெட் முன்பதிவு வகைகள்:

அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு மொபைல் டிக்கெட் பயன்பாட்டைப் பயன்படுத்தி பயணிகள் ஐந்து வகையான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்:
- பொது டிக்கெட் முன்பதிவு
- விரைவான டிக்கெட் முன்பதிவு
- பிளாட்ஃபார்ம் டிக்கெட் முன்பதிவு
- சீசன் டிக்கெட் முன்பதிவு/புதுப்பித்தல்
- QR முன்பதிவு

UTS மொபைல் டிக்கெட் செயலியைப் பயன்படுத்துவதற்கான சில அடிப்படை விதிகள்:

- முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் முன்பதிவு செயலியைப் பயன்படுத்தும் பயணிகள், முன்பதிவு செய்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ரயிலில் ஏறலாம்.

- பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஸ்டேஷனில் இருந்து 2 கிமீ தொலைவில் அல்லது ரயில் பாதையில் இருந்து 15 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.

- பயணிகள் மூன்று, ஆறு அல்லது பன்னிரெண்டு மாதங்களுக்கு சீசன் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயில்வேயின் புதிய நடவடிக்கை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News