ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 10 பிப்ரவரி முதல் இந்த கட்டணங்கள் உயர்கின்றன

ICICI Bank credit card Services:கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய பல்வேறு கட்டணங்களில் வங்கி பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 9, 2022, 07:58 PM IST
  • பிப்ரவரி 10 முதல், வங்கி கட்டண விதிகளை மாற்றும்.
  • அதன் நேரடி தாக்கம் வங்கி வாடிக்கையாளர்கள் மீது இருக்கும்.
  • டியூ தொகைக்கு ஏற்ப லேட் பேமண்ட் கட்டணம் விதிக்கப்படும்.
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 10 பிப்ரவரி முதல் இந்த கட்டணங்கள் உயர்கின்றன title=

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு சேவைகள்: ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடலாம். 

கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய பல்வேறு கட்டணங்களில் வங்கி பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. பிப்ரவரி 10 முதல், வங்கி கட்டண விதிகளை மாற்றும். அதன் நேரடி தாக்கம் வங்கி வாடிக்கையாளர்கள் மீது இருக்கும். 

இந்த கட்டணங்களில் மாற்றங்கள் இருக்கும்

பல கட்டணங்களை வங்கி உயர்த்தியுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேட் பேமண்ட் ஃபீஸ் எனப்படும் தாமத கட்டணம் உட்பட பலவித கட்டணங்கள் இதில் அடங்கும். இந்த புதிய கட்டணங்கள் பிப்ரவரி 10 முதல் அதாவது நாளை முதல் அமலுக்கு வரும். 

இது தவிர, உங்கள் காசோலை ரிட்டர்ண் ஆனால், வங்கி முழு டியூ தொகையில் 2% விகிதத்தில் வசூலிக்கும். இந்த வகையில் பார்த்தால், இதற்கு வங்கி குறைந்தபட்சம் ரூ.500 வசூலிக்கும். அதாவது, நீங்கள் ஐசிஐசிஐ வாடிக்கையாளராக இருந்தால், இப்போது உங்களுக்கு பல கட்டணங்களுக்கு அதிக தொகையை கட்ட வேண்டி இருக்கும். 

மேலும் படிக்க | முதலீடு இரட்டிப்பாகும், வருமான வரி விலக்கு, சூப்பர் ரிட்டர்ன்: PPF-ல் பல நன்மைகள்

டியூ தொகைக்கு ஏற்ப லேட் பேமண்ட் கட்டணம் விதிக்கப்படும்

இது குறித்து வங்கி, 'லேட் பேமண்டுக்கான கட்டணம் உங்கள் மொத்த டியூ அமவுண்ட் எவ்வளவு என்பதைப் பொறுத்தது. அதாவது, உங்களின் டியூ தொகை ரூ. 100க்கு குறைவாக இருந்தால், லேட் பேமெண்ட் கட்டணத்தை வங்கி வசூலிக்காது. ரூ.100 முதல் ரூ. 500 வரையிலான தொகைக்கு வங்கி ரூ.100 லேட் பேமண்ட் கட்டணத்தை வசூலிக்கும். ரூ.501 முதல் ரூ.5,000 வரையிலான தொகைக்கு இந்த கட்டணம் ரூ.500 ஆக இருக்கும். ரூ.5,001 முதல் ரூ.10,000 வரையிலான டியூ தொகைக்கு ரூ.750 லேட் பேமண்ட் கட்டணம் வசூலிக்கப்படும்.' என தெரிவித்துள்ளது. 

மற்ற வங்கிகள் எவ்வளவு வசூலிக்கின்றன

மற்ற வங்கிகளைப் பற்றி பேசுகையில், உங்கள் டியூ தொகை ரூ.10,001-ரூ. 25,000 வரை இருந்தால், லேட் பேமண்டாக ரூ.900 செலுத்த வேண்டும். ரூ.25,001 முதல் 50,000 வரையிலான தொகைக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். ரூ.50,000 டியூ தொகைக்கு ரூ.1,000 மற்றும் ரூ.50,000க்கு மேல் உள்ள தொகைக்கு ரூ.1,200 செலுத்த வேண்டும். 

இருப்பினும், ஒவ்வொரு வங்கியின் லேட் பேமண்ட் கட்டணங்களும் மாறுபட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற முக்கிய வங்கிகள் ரூ.50,000க்கு மேல் உள்ள டியூ தொகைக்கு ரூ.1,300 லேட் பேமண்ட் கட்டணத்தை வசூலிக்கின்றன. ஆக்சிஸ் வங்கி இதற்கு ரூ.1,000 வசூலிக்கிறது.

மேலும் படிக்க | சில நிமிடங்களில் பான் கார்ட் உங்கள் கையில்: முழு வழிகாட்டி இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News