ரயில்வேயில் 10, 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு; இன்றே விண்ணப்பிக்கவும்

Indian Railway Recruitment 2021: ரயில்வேயில் 10வது 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான முக்கிய தகவல்கள்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2021, 05:41 PM IST
  • ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் (Indian Railway Recruitment 2021), SECR secr.indianrailways.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த ஆட்சேர்ப்பு பணியின் கீழ், நிறுவனத்தில் 26 காலியிடங்கள் நிரப்பப்படும்
ரயில்வேயில் 10, 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு; இன்றே விண்ணப்பிக்கவும் title=

Indian Railway Recruitment 2021: தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR)) விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு (SECR Recruitment 2021)விண்ணப்பிக்க நாளை, அதாவது பிப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை கடைசி தேதி. இந்த பதவிகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காத ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் (Indian Railway Recruitment 2021), SECR secr.indianrailways.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு பணியின் கீழ், நிறுவனத்தில் 26 காலியிடங்கள் நிரப்பப்படும்.

2021 பிப்ரவரி 23 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பதாரர் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது தவிர, https://secr.indianrailways.gov.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பதாரர் இந்த பதவிகளுக்கு (Indian Railway Recruitment 2021) நேரடியாக விண்ணப்பிக்கலாம் . மேலும், https://secr.indianrailways.gov.in/uploads/files/1611295118372-Sports%20... - என்ற இந்த இணைப்பு மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை  காணலாம்.

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்புக்கான முக்கிய தேதிகள் 2021

விண்ணப்பித்த தேதி: 23 ஜனவரி 2021
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 23 பிப்ரவரி 2021

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்புக்கான தகுதி 2021

நிலை 2 மற்றும் 3: விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்பமற்ற பதவிகளுக்கு 12 ஆம் வகுப்பையும், தொழில்நுட்ப பதவிகளுக்கு ஐடிஐ உடன் 10 ஆம் வகுப்பையும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நிலை 4: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிலை 5: எந்தவொரு துறையிலும் அல்லது அதற்கு சமமான துறையில் பட்டதாரி.

இந்திய ரயில்வே (Indian Railway) ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை 2021

விளையாட்டு போட்டிகளின் பங்கேற்றது தொடர்பானம் ஆவணங்களின் சரிபார்ப்பு மூலம் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மதிப்பெண்களின் மதிப்பீடு விளையாட்டு திறன்களுக்கு 40 மதிப்பெண்கள், உடல் திறன், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சாதனைகளை மதிப்பீடு செய்ய 50 மதிப்பெண்கள் மற்றும் கல்வித் தகுதிக்கு 10 மதிப்பெண்கள்.

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்புக்கான தேர்வுக் கட்டணம் 2021

விண்ணப்பாதார்களில் மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் ரூ .500 செலுத்த வேண்டும், எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

ALSO READ | Indian Railway வழங்கும் அசத்தல் சேவை... இனி உங்கள் லக்கேஜை சுமக்கும் வேலை இல்லை..!!!
 

 

Trending News