IRCTC trains cancelled: 41 ரயில்கள் ரத்து, 11 ரயில்களின் நேரம் ஒத்திவைப்பு, ஏன் தெரியுமா?

IRCTC 41 ரயில்களை ரத்து செய்துள்ளது, 11 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 14, 2020, 01:39 PM IST
IRCTC trains cancelled: 41 ரயில்கள் ரத்து, 11 ரயில்களின் நேரம் ஒத்திவைப்பு, ஏன் தெரியுமா? title=

புதுடெல்லி: IRCTC 41 ரயில்களை ரத்து செய்துள்ளது, 11 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை 

வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.  இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் ஐ.ஆர்.சி.டி.சியிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ரயில்களில் பெரும்பாலானவை புது தில்லி-கத்ரா மார்க்கத்தில் செல்லும் ரயில்கள். இதற்கான காரணம் விவசாயிகளின் போராட்டம் தான்.இதற்கான காரணம் விவசாயிகளின் போராட்டம் தான். விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020, The Farmers` Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020 மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 (and the Farmers (Empowerment and Protection) அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டம், 2020 (The Essential Commodities (Amendment) Act, 2020)  ஆகிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இவை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதிலிருந்து பஞ்சாபில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பல நாட்களாக தொடரும் கடும் போராட்டத்தால், பஞ்சாபில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே கூறியிருந்தது.

மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நிராகரிக்கும் தீர்மானத்தை பஞ்சாப் சட்டமன்றத்தில் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் நிறைவேற்றினார். செப்டம்பர் 4ஆம் தேதி முதல் பஞ்சாபில் சரக்கு ரயில் சேவைகளை நிறுத்தி வைத்திருப்பது தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் `தர்ணா ' போராட்டாம் நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News