உலகில் உள்ள பணக்கார நிறுவனங்களுள் ஒன்று, அமேசான். இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர், ஜெஃப் பெசாஸ். இவர், உலகின் மூன்றாவது பணக்கார தொழிலதிபராகவும் உள்ளார். தனது நிறுவனத்தின் ஷேர்ஸ்களை கடந்த 12 மாதங்களில் விற்றது மூலம் அவர் இன்னும் பல கோடிகளில் வருமானம் பார்த்துள்ளார்.
கொரோனா காலத்திற்கு பிறகு, அமேசான் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து அதிக அளவிலான விற்பனையை ஈட்டி, வருமானத்தை பார்த்துள்ளது. கொரோனாவிற்கு பிறகு, இந்த விற்பனை விகிதம் 8 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசாஸின் சொத்து மதிப்பு 12.1 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்கார நபராக உள்ள எலான் மஸ்க்கை விட, 8.1 பில்லியன் குறைவாக சம்பாதித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் ஷேர்ஸ்களும் சந்தையில் சரியாக செயல்படவில்லை. இது, அமேசான் நிறுவனத்தின் பங்குகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கடந்த வாரம் விற்றுப்போன பங்குகள் மட்டும் 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை விற்றுப்போயுள்ளதாம்.
50 மில்லியன் ஷேர்ஸ்கள் விற்பனை:
வரும் 2025ஆம் அண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள், ஜெஃப் பெசாஸ் 50 மில்லிய ஷேர்ஸ்களை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது தற்போதைய பங்கு விலையில் சுமார் $8.6 பில்லியன் மதிப்புடையதாக இருக்கும்.
அமேசான் தனது வருடாந்திர அறிக்கையில் Bezos உள்பட மற்ற குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் பங்கு விற்பனை விவரங்களை வெளியிட்டது,
புதிய செக்யூரிட்டிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் விதிகளுக்கு இணங்க, முன் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தகத் திட்டங்களின் கீழ் பங்குகளை அமேசான் நிறுவனம் விற்க உள்ளது.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: 50% அகவிலைப்படி.. தொடர்ந்து 8வது ஊதியக்கமிஷனா?
அமேசானில் பங்கு வாங்குவது எப்படி?
>அமேசானில் மட்டுமல்ல, எந்த நிறுவனத்தில் பங்கு வாங்குவதற்கு முன்னரும் பங்கு தரகரை தேர்ந்தெடுக்கவும். அவர்களை, broker என்று கூறுவர். இவர்கள் ஆன்லைன் ப்ரோக்கராக இருப்பர்.
>ப்ரோக்கரை தேர்வு செய்த பின்னர், எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். இந்த முடிவு, உங்களின் பட்ஜெட்டை பொருத்து இருக்க வேண்டும்.
>அமேசான் நிறுவனம், தற்போது சந்தையில் எந்த மாதிரியான செயல்திறனில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
>அமேசான் இரண்டு வகையான ஷேர்ஸ்களை வெளியிடும். அதில் ஒன்று நீண்ட கால பங்குதாரர்களுக்காக இருக்கும். இன்னொன்று, குறுகிய கால முதலீடு செய்பவர்களுக்காக இருக்கும்.
மேலும் படிக்க | குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ