பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 3 அதிகரிப்பு! மாநில அரசு நடவடிக்கை!

Petrol and diesel prices: கர்நாடகா மாநில அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 3 உயர்ந்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jun 16, 2024, 05:05 PM IST
  • பெங்களூருவில் பெட்ரோல் விலை அதிகரிப்பு.
  • பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.86 ஆக விற்பனை.
  • டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.94 ஆக உயர்வு.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 3 அதிகரிப்பு! மாநில அரசு நடவடிக்கை! title=

Petrol and diesel prices: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி கடந்த ஜூன் 15ஆம் தேதி உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் எரிபொருள் விலை ரூ.3 அதிகரித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கர்நாடக மாநில அரசின் அறிவிப்பின்படி, கர்நாடக விற்பனை வரி அதாவது KST பெட்ரோல் மீதான வரியை 25.92 சதவீதத்தில் இருந்து 29.84 சதவீதமாகவும், டீசல் மீதான வரியை 14.3 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.3 அதிகரித்துள்ளது. நேற்றிலிருந்து பெங்களூருவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.86க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.94 எனவும் விற்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | Chandrababu Naidu: 12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த நிகர மதிப்பு... கோடீஸ்வரரான 9 வயது பேரன்

இந்த திடீர் விலை உயர்வு குறித்து அகில கர்நாடக பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.எம்.பசவேகவுடா மணிகண்ட்ரோல் கூறியதாவது. "மாலை எங்களுக்கு இந்த அறிவிப்பு வந்தது, உடனடியாக விலையை மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பித்தோம் என்று கூறினார். மேலும் வரும் நிதியாண்டில் மாநில அரசு எரிபொருள் மூலம் ரூ.2,500 முதல் ரூ.2,800 கோடி வரை வருமானம் திரட்ட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கடந்த மார்ச் 14 முதல் ஜூன் 4 வரை லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்ததால் மாநிலத்தின் வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. எனவே நிதி இலாகாவை வைத்திருக்கும் முதல்வர் சித்தராமையா போதிய நிதி நிலையை அடைய இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

பெட்ரோல் விலை உயர்வு குறித்து முதல்வர் சித்தராமையா 

கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ள நிலையில், மகாராஷ்டிராவை விட கர்நாடகாவில் எரிபொருள் விலை இன்னும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இடங்களை விட தற்போது கர்நாடகாவின் திருத்தப்பட்ட எரிவாயு கட்டணங்கள் கம்மியான விலையில் தான் உள்ளது. வாட் வரி உயர்த்தப்பட்டாலும் மற்ற மாநிலங்களை விட கர்நாடகாவில் டீசல் விலை குறைவாகவே உள்ளது" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடகாவின் வளங்களை மற்ற மாநிலங்களுக்கு பாஜக அரசு கொடுத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.9.21ல் இருந்து ரூ.32.98 ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ரூ.3.45ல் இருந்து ரூ.31.84 ஆகவும் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் உயர்த்தி உள்ளது. இந்த வரி உயர்வு மக்களுக்கு சுமையாக உள்ளது. மக்களின் நலன் கருதி இந்த வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் கருத்து

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 இடங்களில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 19 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 9 இடங்களில் வென்றது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததற்காக கன்னட மக்களை மக்கள் விரோத காங்கிரஸ் அரசு பழிவாங்குகிறது என்று கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா கூறியுள்ளார். “ மாநிலத்தின் கஜானாவை காலி செய்துவிட்டு, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு கன்னடர்களுக்கு வரி விதித்து கஜானாவை நிரப்பப் போகிறது,” என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | 15 நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? 2 வாரத்தில் நல்ல லாபம் தரும் பங்குகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News