தினமும் 333 ரூபாய் சேமித்து கோடீஸ்வர் ஆவது எப்படி..!!!

மியூச்சுவல் ஃபண்டுகள் அதாவது பரஸ்பர நிதியங்கள் மூலம், சிறந்த வருமானம் கிடைக்கும் என்பதை  சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை அளிக்கின்றன.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 15, 2020, 03:17 PM IST
  • நீங்கள் தினமும் ரூ .333 சேமித்தால் போதும், நீங்கள் கோடீஸ்வரர் ஆவதை யாரும் தடுக்க முடியாது.
  • சிறந்த வருமானம் கிடைக்க, வெவ்வேறு திட்டங்களை, முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
  • நீங்கள் விரைவில் கோடீஸ்வரராக, முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு முதலீட்டின் அளவை அதிகரிக்கலாம்.
தினமும் 333 ரூபாய் சேமித்து கோடீஸ்வர் ஆவது எப்படி..!!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, நிதி துறையில்  சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களில் நிதிதுறை வேகமாக மேம்பட்டுள்ளது, இப்போது மீண்டும் சிறந்த வருமானத்தை கொடுக்கத் தொடங்கியுள்ளது. இப்போது, பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதற்கான சரியான நேரம் என்று கூறுகின்றனர். இதன் மூலம் ஒருவர் 1 ஆண்டில் நல்ல வருமானத்தைப் பெற முடியும். 

மியூச்சுவல் ஃபண்டுகள் அதாவது பரஸ்பர நிதியங்கள் மூலம், சிறந்த வருமானம் கிடைக்கும் என்பதை  சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை அளிக்கின்றன.

பரஸ்பர நிதிகளின் முறையான மாதாந்திர முதலீட்டுத் திட்டங்கள், SIP என்பது முதலீட்டிற்கான சிறந்த வழிமுறையாகும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்து, சிறந்த வருவாயைப் பெறலாம். கொரோனா தொடர்பாக நெருக்கடி நிலையில் இருந்து விரவிவாக நிது துறை மீன்உ வருவதால், இது முதலீட்டிற்கான சிறந்த நேரம் ஆகும்.

சந்தை வல்லுநர் மற்றும் BPN FINCAP CONSULTANTS இயக்குநர், சில ஆண்டுகளில் முதலீடுகள் மூலம் கோடீஸ்வரராக விரும்பும் நபர், முதலீடு போதாது. உங்கள் முதலீட்டின் மூலம், கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு உங்கள் முதலீட்டுத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். தேவையின்றி செலவு செய்யாமல், நீண்ட கால கண்ணோட்டத்துடன் ஸ்மார்ட் நிதி திட்டமிட வேண்டும் என்று கூறுகிறார்.

ALSO READ | தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!

நீங்கள் விரைவில் கோடீஸ்வரராக, முதலீடு செய்யும் பணத்தை தொடர்ந்து அதிகரிப்பதும் முக்கியம். முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு முதலீட்டின் அளவை அதிகரிக்கலாம்

10000 ரூபாய் முதலீடு போதும்

நீங்கள் தினமும் ரூ .333 சேமித்தால் போதும், நீங்கள் கோடீஸ்வரர் ஆவதை யாரும் தடுக்க முடியாது. நீங்கள் 20 ஆண்டுகளில் கோடீஸ்வரராக மாற விரும்பினால், இதற்காக, நீங்கள் SIP மூலம் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாயை மட்டுமே பங்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீட்டிற்கு இரட்டை இலக்கத்தில் வருமானம் கிடைத்தால், எடுத்துக்காட்டாக 13 சதவீதம் என்ற அளவிற்கு முதலீட்டு வருமானம் இருந்தால், பின்னர் 20 ஆண்டுகளில் நீங்கள் 1,13,32,424 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் முதலீட்டின் அளவை அவ்வப்போது அதிகரித்தால், இந்த இலக்கை அடைவது இன்னும் எளிதாக இருக்கும்.

சிறந்த வருமானம் கிடைக்க, வெவ்வேறு திட்டங்களை, முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். இதற்கு நீங்கள், இதற்கென இருக்கும் கன்சல்டண்ட்களை ஆலோசனை செய்யலாம்.  இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டாளர்கள் தங்களது தற்போதைய பொருளாதார நிலைமையையும், முதலீடு செய்ய உள்ள திட்டத்தில் உள்ள நன்மைகள், சந்தை அபாயங்கள் ஆகியவற்றை மதிப்பிட வேண்டும்.

ALSO READ | மக்கள் மன நிலையை மாற்றிய கொரோனா... ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி நகரும் மக்கள்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

More Stories

Trending News