Life certificate: உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்கலையா.. கவலை வேண்டாம்.. வீடு தேடி வரும் சேவை..!!

ஓய்வூதியம் பெறுவோர், சரியான நேரத்தில் ஓய்வூதியத்தைப் பெற, அவர்களின் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 5, 2023, 07:04 PM IST
  • உயிர்வாழ் சான்றிதழை வழங்க, நேரிடையாக வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை.
  • அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை மொத்தம் ஏழு வழிகளில் சமர்ப்பிக்கலாம்.
Life certificate: உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்கலையா.. கவலை வேண்டாம்.. வீடு தேடி வரும் சேவை..!! title=

ஓய்வூதியம் பெறுவோர், சரியான நேரத்தில் ஓய்வூதியத்தைப் பெற, அவர்களின் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால், ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate) சமர்பிப்பதற்கான கடைசி தேதி 30 நவம்பர் 2023 ஆகும். ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை மொத்தம் ஏழு வழிகளில் சமர்ப்பிக்கலாம். அந்த முறைகள் என்னவென்று பார்ப்போம்.

ஜீவன் பிரமான் போர்ட்டல் (Jeevan Praman App)

உமங்க் மொபைல் செயலி (Umang App)

வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளர் அடையாளச் செயல்முறை

தபால் அலுவலக பயோமெட்ரிக் சாதனங்கள்

வங்கிக் கிளைக்குச் சென்று உயிர்வாழ் சான்றிதழை நேரிடையாக சமர்ப்பித்தல்

டோர் ஸ்டெப் வங்கி (DSB) சேவை

முக அங்கீகாரம் (Face Authentication)

டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அரசின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் திட்டத்தின் (Digital Life Certificate Scheme) நோக்கம், ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்றிதழை வழங்க, நேரிடையாக வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. அவர் தனது உயிர்வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிக்கலாம். பல நேரங்களில், உடல் நலமின்மை, வயோதிக பிரச்சனைகள் காரணமாக, ஓய்வூதியம் பெறுவோர், நேரிடையாக வங்கி கிளைக்கு சென்று உயிர்வாழ் சான்றிதழை சமர்பிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.  இந்நிலையில், ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க | NPS முக்கிய அப்டேட்: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்!!

டிஜிட்டல் உயிர்வாழ் என்றால் என்ன?

ஓய்வூதியதாரர்களுக்கான பயோமெட்ரிக்ஸ்-இயக்கப்பட்ட டிஜிட்டல் சேவை ஜீவன் பிரமான் (Digital Life Certificate) என்று அழைக்கப்படுகிறது. மத்திய, மாநில அல்லது வேறு எந்த அரசு நிறுவனத்திலும் ஓய்வூதியம் பெறுவோர் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். உயிர்வாழ் சான்றிதழ் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வாழ்க்கைச் சான்றிதழை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். லைஃப் சர்டிபிகேட் என்றால் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதற்கான சான்று ஆவணம்.

டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை

ஓய்வூதியம் பெறுபவர் தனது உயிர்வாழ் சான்றிதழை வெவ்வேறு வழிகளில் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு டிஜிட்டல் லைஃப் சான்றிதழுக்கான அணுகல் உள்ளது, இது பயோமெட்ரிக்ஸுடன் கூடிய டிஜிட்டல் சேவையாகும். இது தவிர, உங்கள் வங்கி அல்லது தபால் நிலையங்களில் வாழ்க்கைச் சான்றிதழையும் சமர்ப்பிக்கலாம்.

தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம் 1995-ன் விதிகளுக்கு இணங்க ஒவ்வொரு ஓய்வூதியதாரரும், மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை பெற, வருடத்துக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அதாவது 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான உயிர் சான்றிதழை சமர்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 1 முதல் தொடங்கியுள்ளது. 60 முதல் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் பெறுவோர் நவம்பர் 1 முதல் 30 வரை உயிர்ச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். இந்த முறைகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆண்டு வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டும் அடங்கும். 

மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி: தீபாவளி பரிசாக வருகிறதா பம்பர் தொகை? அதிரடி அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News