National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்கும், பட்ஜெட்டில் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளிவந்தது. மத்திய பட்ஜெட்டில், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முதலாளி / நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சார்பில் என்பிஎஸ் கணக்கிற்கு (NPS Account) அளிக்கப்படும் பங்களிப்பு 10% -இலிருந்து 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
NPS -இல் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் புதிய வரி விதிப்பில் (New Tax Regime) பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் என இரு தரப்பினருக்கும் பொருந்தும். அரசு ஊழியர்களுக்கு இந்த பங்களிப்பு ஏற்கனவே 14% ஆக உள்ளது.
புதிய வரி முறையில் மட்டுமே 14% பங்களிப்பு கிடைக்கும்
- பிரிவு 80CCD (2) இன் கீழ், பழைய மற்றும் புதிய வரி முறைகள் இரண்டிலும் NPS பங்களிப்பு கிடைக்கும்.
- ஆனால், புதிய வருமான வரி முறையில் மட்டும்தான் நிறுவன பங்களிப்பு 14% ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவில் சிறிய வித்தியாசம் ஏற்பட்டு வீட்டுச் செலவுகளில் சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனினும், ஓய்வூதிய அடிப்படையில் இது நன்மை பயக்கும்.
14% என்பிஎஸ் பங்களிப்புக்கான கணக்கீடு:
NPS இல் கணக்கு தொடங்கிய வயது=30, அடிப்படை சம்பளம் - ரூ 35000, அடிப்படை சம்பளத்தில் 14% - ரூ 4900, NPS இல் ஒவ்வொரு மாதமும் முதலீடு - 4900, மதிப்பிடப்பட்ட முதலீட்டு வருமானம் - ஆண்டுக்கு 10%, 30 ஆண்டுகளில் மொத்த முதலீடு - 17,64,000, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த நிதி - ரூ.1,11,68,695, வருடாந்திர தொகை (ஆனுவிட்டி) - 40%, வருடாந்திரத்தில் மதிப்பிடப்பட்ட வருமானம் - ஆண்டுக்கு 8%, 60 வயதில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் - ரூ 29,783
10% என்பிஎஸ் பங்களிப்புக்கான கணக்கீடு:
NPS இல் கணக்கு தொடங்கிய வயது - 30, அடிப்படை சம்பளம் - ரூ 40,000, அடிப்படை சம்பளத்தில் 10% - 4000, NPS இல் மாதாந்திர முதலீடு - 4000, மதிப்பிடப்பட்ட முதலீட்டு வருமானம் - ஆண்டுக்கு 10%, 30 ஆண்டுகளில் மொத்த முதலீடு - 14,40,000, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த நிதி - 91,17,302, வருடாந்திர தொகை (ஆனுவிட்டி) - 40%, வருடாந்திரத்தில் மதிப்பிடப்பட்ட வருமானம் - ஆண்டுக்கு 8%, 60 வயதில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் - ரூ 24,313
40 சதவீத அதிகரிப்பு
தேசிய ஓய்வூதிய முறையின் இந்த கணக்கீட்டின்படி, NPS -இல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதிக்குப் பிறகு இப்போது பணியாளர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்கப்படும். புதிய விதிக்குப் பிறகு, ஓய்வூதியத்தில் சுமார் 40 சதவிகித உயர்வு இருக்கும். தேசிய ஓய்வூதிய அமைப்பில் ஓய்வு பெறும்போது பெறப்படும் மொத்த தொகையும் அதிகரித்து கிடைக்கும். புதிய விதிகளின்படி இதில் 40 சதவீதம் அதிகரிப்பு இருக்கும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இது பற்றி தனது பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சமூகப் பாதுகாப்புப் பலன்களை மேம்படுத்தும் வகையில், என்.பி.எஸ்-க்கான முதலாளிகளின் பங்களிப்பின் மீதான பிடித்தத்தை ஊழியர்களின் சம்பளத்தில் 10% லிருந்து 14% ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். அதாவது, பழைய வரி முறையைப் பயன்படுத்தும் வரி செலுத்துவோர், முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பில் (அடிப்படை சம்பளத்தில்) 10% மட்டுமே பங்களிப்பை பெற முடியும்.
NPS: பல நன்மைகளைக் கொண்டுள்ள அரசாங்க ஓய்வூதியத் திட்டம்
NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பு அரசாங்க ஓய்வூதியப் பயன் திட்டமாகும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தவிர, சாதாரண மக்களும் இதில் முதலீடு செய்யலாம். என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு (NPS Subscribers) 60 வயதாகும்போது, இந்தத் திட்டத்திலிருந்து வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், இதில் பங்களிக்கும் சந்தாதாரரின் பங்களிப்புத் தொகை, பல்வேறு வழிகளில், பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சந்தாதாரர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப ஹை ரிஸ்க் அல்லது லோ ரிஸ்க் முதலீட்டு விருப்பங்களைப் பயன்படுத்தலாம்.
NPS: இதில் உள்ள வகைகள் என்ன?
NPS இல் இரண்டு வகையான கணக்குகள் உள்ளன:
- டயர் 1
- டயர் 2
டயர் 1 என்பது ஓய்வூதியக் கணக்காகும். இதில் ஓய்வூதிய சேமிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. டயர் 2 என்பது ஒரு தன்னார்வ சேமிப்புக் கணக்காகும். பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் என்.பி.எஸ் -இல் முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பை அதிகரிப்பதாக அறிவித்தது முதல், இந்தத் திட்டத்தின் மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ