Income Tax: கவனம்! இனிமேல் வருமான வரி ஏய்ப்பு செய்வது கடினம்

வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடிக்க ஐ-டி துறை ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி சுமார் 6,000 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வருமான வரி (Income tax) செலுத்துவோர் வருமான வரித் துறையை ஏமாற்றுவது இனிமேல் கடினமாக இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2020, 08:14 PM IST
  • இனிமேல் வருமான வரி ஏய்ப்பு செய்வது கடினம்
  • வருமான வரித்துறையின் கேள்விகளைப் புறக்கணித்தால் விளைவு விபரீதமாகும்
  • வருமானம் 5 லட்சம் ரூபாய், டெபாசிட் 22 கோடி ரூபாயா!
Income Tax: கவனம்! இனிமேல் வருமான வரி ஏய்ப்பு செய்வது கடினம் title=

புதுடெல்லி: வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடிக்க ஐ-டி துறை ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி சுமார் 6,000 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வருமான வரி (Income tax) செலுத்துவோர் வருமான வரித் துறையை ஏமாற்றுவது இனிமேல் கடினமாக இருக்கும். 

வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக வருமான வரித்துறை ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. பெயரிலி வருமான வரி கணக்கீட்டு திட்டம் (Faceless Assessment Scheme). இந்தத் திட்டம் மூலம் இப்போது வரி ஏய்ப்பவர்கள், சுற்றி வளைக்கப்படுவார்கள். விசாரணை மற்றும் சரிபார்ப்பு அறிவிப்புக்கு, வேண்டுமென்றே பதிலளிக்காதவர்கள் மீது வருமான வரித்துறை இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

வரி ஏய்ப்பு செய்த அத்தகைய நபர்களைக் கண்டுபிடிக்க வருமான வரித் துறை பெயரிலி வருமான வரி (Income Tax) கணக்கீட்டு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தினால் சுமார் 6,000 வழக்குகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வரியை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வருமான வரித் துறையின் கேள்விகளுக்கும் அறிவிப்புகளுக்கும் பதிலளிக்காதவர்களை வருமான வரித் துறை கட்டம் கட்டி விட்டது.  

Also Read | வருமான வரி: விமான டிக்கெட், நகை வாங்குதல், கல்வி தொடர்பான புதிய விதிகள்..!!!

வருமான வரித்துறையின் கேள்விகளைப் புறக்கணித்தால் விளைவு விபரீதமாகும்  

இதற்கு முன்னதாக, வருமான வரித்துறை கேட்கும் கேள்வியை தவிர்ப்பதற்காக பதிலளிக்காமல் இருப்பவர்கள்  காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது அத்தகைய வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களின் வருமான வரி கணக்கு மற்றும் அவர்களுடைய பண பரிவர்த்தனைகளை மதிப்பீட்டோடு பொருத்துவது எளிதாக இருக்கும். இதன் மூலம், வருமான வரி வருமானத்திற்கும் செலவுகளுக்கும் வித்தியாசம் காணப்படும்.

செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் இடர் பகுப்பாய்வும் மேம்பட்டுள்ளது. இதனால், வருமான விஷயத்தில் இருக்கும் வித்தியாசத்தை கண்டறிந்து வருமான வரி ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒருவர் தனது ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதாகக் காட்டினார், அதே நேரத்தில் அவர் சுமார் 10 கோடியை டெபாசிட் செய்து 7.5 கோடியை எடுத்தார். அவருக்கு அனுப்பிய 6 அறிவிப்புகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை, 10 க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் பிற வழிகளில் அவரை தொடர்பு கொள்ள முயன்றது வருமான வரித் துறை. அவருடைய முகவரிகளில் வருமான வரி சோதனைகள் நடத்தியும் கூட அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

Also Read | பெயரிலி வருமான வரி கணக்கீட்டு திட்டம்: அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

வருமான வரித் தாக்கல் செய்யும்போது குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் இருந்த வணிக வளாகம் வேறு ஒருவருக்கு சொந்தமானது. இறுதியில் வங்கியில் (Bank) கொடுக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து அவரது வீடு கண்டறியப்பட்டது, ஆனால் அவர் தப்பிவிட்டார். இப்போது அவரது வங்கிக் கணக்கு மற்றும் பிற சொத்துக்களை வருமான வரித் துறையினர் எடுத்துக் கொள்ளும் செயல்முறை தொடங்கப்பட்டுவிட்டது.

வருமானம் 5 லட்சம் ரூபாய், டெபாசிட் 22 கோடி ரூபாயா!

மற்றொரு வழக்கில், அல்வாரைச் சேர்ந்த ஒருவர் தனது வருமானம் 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே என்று வருமான வரி தாக்கல் செய்திருந்தார். இது அவரது வங்கிக் கணக்கின் விவரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது கண்டறியப்பட்டது. 2017-18 ஆம் ஆண்டில் அவர் 27 கோடி ரூபாயும், 2019-20ல் 22 கோடியையும் கோடி ரூபாயும் டெபாசிட் செய்திருந்தார்.

Also Read | நேர்மையாக வரி செலுத்துவோர் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்

இதேபோல், மும்பையைச் சேர்ந்த ஒருவர், ஒரு வருடத்தில் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருப்பதாக காட்டினார், ஆனால் அவர் 12 கோடி ரொக்கத்தை டெபாசிட் செய்தார். பின்னர், அவர் சுமார் 60 கோடி ரூபாயை ரொக்கமாக டெபாசிட் செய்திருப்பது தெரியவந்தது.  

வெளிப்படைத்தன்மை தேவை

தற்போது பெயரிலி வருமான வரி கணக்கீட்டு திட்டம் (Faceless Assessment Scheme) வரி மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும். ஏனெனில், வங்கி மற்றும் பிற பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டும் கணக்கீடு செய்யும்.  பெயரிலி வருமான வரி கணக்கீட்டு திட்டம் (Faceless Assessment Scheme) வரி மதிப்பீடு வரி ஏய்ப்பு செய்வது இனி சாத்தியமில்லை.

Also Read | Pizza வாங்க வங்கிக் கணக்கையே காலி செய்த தம்பதிகளின் சோகம்  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News