Pizza வாங்க வங்கிக் கணக்கையே காலி செய்த தம்பதிகளின் சோகம்!

நவி மும்பை பகுதியில் ஆன்லைனில் பீட்சா (Pizza)  ஆர்டர் செய்த  வயதான தம்பதியினர் அதற்கு கொடுத்த விலைi மிகவும் அதிகம். வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் Pizzaவின் விலை என்றால் எப்படி இருக்கும்?  ஆனால், பணம் போன பிறகும் பீட்சா வரவில்லை என்பது தான் இன்னும் கொடுமையான செய்தி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2020, 06:21 PM IST
  • ஒரு பீட்சாவுக்கு கொடுத்த விலை 50 ஆயிரம் ரூபாய்
  • ஆனால் பீட்சா மட்டும் வந்து சேரவில்லை
  • ஆன்லைனில் ஆர்டர் செய்வது பாதுகாப்பானதா?
Pizza வாங்க வங்கிக் கணக்கையே காலி செய்த தம்பதிகளின் சோகம்! title=

புதுடெல்லி: நவி மும்பை பகுதியில் ஆன்லைனில் பீட்சா (Pizza)  ஆர்டர் செய்த  வயதான தம்பதியினர் அதற்கு கொடுத்த விலைi மிகவும் அதிகம். வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் Pizzaவின் விலை என்றால் எப்படி இருக்கும்?  ஆனால், பணம் போன பிறகும் பீட்சா வரவில்லை என்பது தான் இன்னும் கொடுமையான செய்தி.

நவி மும்பையின் (Navi Mumbai) நெருல் செக்டர் -6 இல் வசிக்கும் விஷ்ணு மற்றும் ரோமி ஸ்ரீவாஸ்தவா, அருகிலுள்ள பீஸ்ஸா மையத்தின் எண்ணை ஆன்லைன் மூலம் தேடி எடுத்தார்கள்.  தொலைபேசியை எடுத்த நபர், கொடுக்கப்பட்ட இணைப்பில் வங்கியின் கார்டில் இருந்து 5 ரூபாய் (Rupee)  மட்டுமே செலுத்தினிஆல் போதும், பீட்சா வீட்டைத் தேடி வரும் என்று கூறினார்.

5 ரூபாய் என்று சொல்லி 50 ஆயிரம் ரூபாய் காலி செய்த மோசடி
தொலைபேசியில் கூறியதை நம்பிய ரோமி ஸ்ரீவாஸ்தவா தனது கணக்கில் இருந்து 5 ரூபாயை கொடுக்கப்பட்ட இணைப்பிற்கு (Link) மாற்றிவிட்டார். ஆனால் அரை மணி நேரத்தில் தயாரிக்கப்பட வேண்டிய பீஸ்ஸா (Pizza) மாலை 4 மணி வரை வராதபோது, அதைப் பற்றி தனது மகனிடம் கூறினார். மகன் தொலைபேசியில் வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, அதில் 50 ஆயிரம் ரூபாய் ஸ்வாஹா ஆனது தெரிந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் போலீசில் (Police) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Also Read | அங்கீகரிக்கப்படாத மொபைல் App மூலம் கடன் வாங்க வேண்டாம்: RBI

71,500 கோடி மோசடி
இதுபோன்று நடைபெறுவது முதல்முறை அல்ல. கடந்த 11 ஆண்டுகளில் 53,334 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதில், பொதுமக்களின் 2.05 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் காரணமாக, 2018-19ஆம் ஆண்டில், 71,500 கோடி ரூபாய் வங்கி மோசடி நடந்ததாக சமீபத்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிக்கை கூறுகிறது.

புகார் செய்வது எப்படி
வங்கி மோசடி (Bank Fraud) சம்பவம் உங்களுக்கு நடந்தால் உடனே அந்த விவகாரத்தை புகார் செய்ய வேண்டும். வங்கிகள் 24x7 மணி நேரமும் புகார் கொடுக்கும் வசதியை வழங்க வேண்டியது அவசியம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. இந்த புகாரை எஸ்எம்எஸ் (SMS), மின்னஞ்சல் அல்லது ஐவிஆர் மூலம் செய்யலாம்.  

Also Read | Army, Navy-யில் உள்ள வீரர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை அளிக்கிறது இந்த வங்கி

என்ன செய்ய வேண்டும்?
1. முதலில், உங்கள் வங்கி கணக்கு தொடர்பான எந்த தகவலையும் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
2. உங்களிடம் ஏதேனும் மோசடி இருந்தால், முதலில் உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும்.
3. உங்கள் பின் (PIN), கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்திருங்கள்.
ரிசர்வ் வங்கி வங்கியின் தரப்பில் இருந்து ஒருபோதும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்போ, மின்னஞ்சலோ செய்தியோ வருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Also Read | Xiaomi போன் வாங்கினால் தான் திருமணம் என ட்வீட் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

எந்தவிதமான நப்பாசைக்கும் ஆட்படுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் சலுகை விலையில் கிடைக்கிறது என்று நப்பாசையில் செய்யும் விஷயங்கள் உங்களுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News