EPFO: அதிக ஓய்வூதியம் பெற விருப்பமா? உடனே இத பண்ணிடுங்க!

EPFO Higher Pension Apply: உறுப்பினர்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தை பெற மே 3, 2023 தான் கடை நாள் என்பதை இபிஎஃப்ஓ-ன் ​​ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்ட்டலில் உள்ள யூஆர்எல் தெளிவாக காட்டுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 28, 2023, 06:47 AM IST
  • அதிக ஓய்வூதியம் பெற மார்ச் 3, 2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று முன்னர் கூறப்பட்டது.
  • அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க 4 மாத அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • தற்போது அதிக ஓய்வூதியம் பெற கடைசி தேதி மே 3 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
EPFO: அதிக ஓய்வூதியம் பெற விருப்பமா? உடனே இத பண்ணிடுங்க!  title=

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்ட்டலில் அனைத்து தகுதியான உறுப்பினர்களும் அதிக ஓய்வூதியம் பெறுவதற்காக மே 3, 2023 வரை தங்கள் முதலாளிகளுடன் இணைந்து விண்ணப்பித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.  முன்னர் அதிக ஓய்வூதியம் பெற மார்ச் 3, 2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மே 3 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.  உறுப்பினர்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தை பெற மே 3, 2023 தான் கடை நாள் என்பதை இபிஎஃப்ஓ-ன் ​​ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்ட்டலில் உள்ள யூஆர்எல் தெளிவாக காட்டுகிறது.  கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தகுதியான அனைத்து உறுப்பினர்களுக்கும் உயர் ஓய்வூதியத்தைத் தேர்வு செய்ய அவர்களுக்கு நான்கு மாதங்கள் வழங்க வேண்டும் என்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (இபிஎஃப்ஓ) நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் படிக்க | 8th Pay Commission:வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்? அப்டேட் இதோ 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நான்கு மாத கால அவகாசம் மார்ச் 3, 2023 ஆகும்.  இதனால் ஊழியர்கள் பலரும் மார்ச் 3-க்குள் காலம் முடிந்துவிட போகிறதே என்கிற கவலையில் இருந்து வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தி அவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.  இபிஎஃப்ஓ கடந்த வாரத்தில் அதன் உறுப்பினர்கள், அவர்களது முதலாளியுடன் சேர்ந்து ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெற கூட்டாக விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது.  கடந்த ஆண்டு நவம்பரில், உச்ச நீதிமன்றம் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 2014ஐ உறுதி செய்தது.  ஆகஸ்ட் 22, 2014 இபிஎஸ் திருத்தத்தின்படி, ஒரு மாதத்திற்கு ரூ.6,500 ஆக இருந்த ஓய்வூதிய வரம்பு ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டது.  இபிஎஸ்க்கு ஊழியர்களின் உண்மையான சம்பளத்தில் 8.33% பங்களிக்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பமும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு ரசீது எண் வழங்கப்படும். 

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் பொறுப்பாளர், அதிக சம்பளத்திற்கான கூட்டு விருப்பத்தின் ஒவ்வொரு வழக்கையும் ஆய்வு செய்து, விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல்/அஞ்சல் மூலமாகவும், பின்னர் குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்க வேண்டும்.  உச்ச நீதிமன்றம் இபிஎஸ்-95ன் கீழ் அதிக ஓய்வூதியம் பெற தகுதியான சந்தாதாரர்களுக்கு மேலும் நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கியது.  2014-ம் ஆண்டு திருத்தங்களில் மாதம் ரூ.15,000க்கு மேல் சம்பளம் பெறும் ஊழியர்கள் தனது சம்பளத்தில் 1.16% பங்களிப்பை அளிக்க வேண்டும் என்கிற தேவையை தள்ளுபடி செய்துள்ளது.  உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தகுதியான சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியத்திற்கான விருப்பத்தை வழங்குமாறு இபிஎஃப்ஓ ​​தனது கள அலுவலகங்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 2000 ரூபாயை கள்ள நோட்டா என்று பார்ப்பது எப்படி? - ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News