செய்யும் எல்லா செலவுக்கும் கேஷ்பேக் வேண்டுமா? சிம்பிள் டெக்னிக் இதுதான்

Cashback in credit cards: கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் கட்டணங்கள் அனைத்திற்கும் கேஷ்பேக் பெற வேண்டுமா? அதற்கு செய்ய வேண்டிய சிம்பிள் வேலைகள் இவை தான்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2023, 06:25 PM IST
  • கிரெடிட் கார்டு செலவுகளுக்கு கேஷ்பேக்
  • வெகுமதி புள்ளிகளை பணமாக மாற்றலாம்
  • பணமாக கிடைக்கும் டிஸ்கவுண்ட்
செய்யும் எல்லா செலவுக்கும் கேஷ்பேக் வேண்டுமா? சிம்பிள் டெக்னிக் இதுதான் title=

கிரெடிட் கார்டின் நன்மைகளைப் பெற, முதலில் சரியான அட்டையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். உங்கள் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொண்டு, கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கவும். கிரெடிட் கார்டுகளில் கேஷ்பேக் கொடுப்பதாலேயே, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் பலர் பொருட்களை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.  மளிகை பொருட்கள், உணவு, வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பில் செலுத்துவது என கிரெடிட் கார்டுகள் மூலம் செலவழிக்க அதிலிருந்து கிடைக்கும் கேஷ்பேக் சலுகைகளும் முக்கியமானவை ஆகும்.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது, ​​நீங்கள் தேர்வு செய்யும் சலுகையைப் பொறுத்து குறிப்பிட்ட சதவீத கேஷ்பேக் கிடைக்கும். கிரெடிட் கார்டில் கிடைக்கும் கேஷ்பேக்கை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

கேஷ்பேக் சலுகைகள்
ஈ-காமர்ஸ் அல்லது ஏதேனும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரிடம் இருந்து பொருட்களை வாங்கும் போது, ​​உங்களுக்கு இந்த கேஷ் பேக் சலுகை கிடைக்கும். அதாவது உங்கள் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் பெறத் தகுதி இருந்தால், நீங்கள் செலுத்திய பணத்தில் 1% வரை திரும்பப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ITR தாக்கலில் மறைக்கக்கூடாத 6 விஷயங்கள்: மறைத்தால் வீடு தேடி வருமான வரி நோட்டீஸ் வரும்

கேஷ்பேக் சலுகை

கேஷ்பேக் என்பது கிரெடிட் கார்டு நிறுவனத்திற்கும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளருக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். ஒவ்வொரு முறை பொருள் வாங்கும்போதும், சில்லறை விற்பனையாளர் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் திருப்பித் தர வேண்டும். பின்னர் வங்கி இந்த வருவாயில் ஒரு பகுதியை வாடிக்கையாளருடன் பகிர்ந்து கொள்கிறது.

சரியான கேஷ்பேக் கார்டை எவ்வாறு தேர்வு செய்வது?
கிரெடிட் கார்டின் கேஷ்பேக் நன்மைகளைப் பெற, முதலில் சரியான அட்டையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நீங்கள் பணம் செலவழிக்கும் விதத்தின் அடிப்படையில் கார்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு கார்டு வகையிலும் ஒவ்வொரு முறை செலவளிக்கும்போதும் கேஷ்பேக் கிடைக்கலாம்.

கிரெடிட் கார்டை வாங்குவதற்கு முன்னர், நீங்கள் செய்யும் செலவுகள் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் பயணத்திற்கு அதிக செலவு செய்பவராக இருந்தால், பயண கட்டணங்களுக்கு  அதிக சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கும் கார்டைத் தேர்வு செய்யவும்.

மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் இலவசமாக கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி?

சரியான நேரத்தில் பயன்படுத்தவும்

கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் ஒவ்வொரு கட்டணத்திற்கும் கேஷ்பேக் அல்லது கூப்பன்கள் கிடைக்கும். சில சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். எனவே, கிரெடிட் கார்டு அறிக்கையை அவ்வப்போது சரிபார்க்கவும் 

கிரெடிட் கார்டு அப்டேட்
உங்கள் கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்த செய்திகளை தொடர்ந்து கவனித்து வரவும். பயனடையக்கூடிய புதிய சலுகைகள், விளம்பரங்கள் அல்லது கேஷ்பேக்குகள் அடிக்கடி அறிமுகமாகின்றன. புதுப்பித்த நிலையில் இருக்க உங்கள் வங்கியின் கிரெடிட் கார்டு இணையதளம் அல்லது ஆப்ஸைக் கண்காணிப்பது கேஷ்பேக்கை திறம்பட பெற்றிட உதவும்.  

வெகுமதிகள் மற்றும் சலுகைகள்
கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போதெல்லாம், ஒவ்வொரு வாங்குதலுக்கும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஒரே சலுகையை வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில கார்டுகள் மளிகைப் பொருட்களுக்கு 5% கேஷ்பேக் வழங்கலாம் ஆனால் எரிபொருள் அல்லது உணவுக்கு 1% மட்டுமே வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், அதிகபட்ச பலன்களைப் பெற உங்கள் கார்டுகளின் வகைகளின்படி உங்கள் வாங்குதல்களைத் திட்டமிடுங்கள்.

மேலும் படிக்க | Kisan Credit Card: குறைந்த வட்டியில் 3 லட்சம் வரை கடன்! விவசாயிகளுக்கு முன்னுரிமை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News