Pay the Fine Maruti: மாருதி கார் நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பின்னணி என்ன?

இந்தியப் போட்டி ஆணையம்  நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்தது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 23, 2021, 10:06 PM IST
  • மாருதி கார் நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் அபராதம்
  • அபராதத் தொகையை 60 நாட்களுக்குள் டெபாசிட் செய்யவேண்டும்
  • பின்னணி என்ன?
Pay the Fine Maruti: மாருதி கார் நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பின்னணி என்ன? title=

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 60 நாட்களுக்குள் டெபாசிட் செய்யுமாறு நிறுவனத்திற்கு CCI ஆகஸ்ட் 23 ம் தேதி அறிவுறுத்தியது.

இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) ஆகஸ்ட் 23 அன்று நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (எம்எஸ்ஐஎல்) க்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

இது தொடர்பாக CCI வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தள்ளுபடியை அமல்படுத்துவதன் மூலம் பயணிகள் வாகனப் பிரிவில் மறுவிற்பனை விலை பராமரிப்பு (Resale Price Maintenance (RPM) போட்டி-விரோத நடத்தையில் ஈடுபட்டுள்ள மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) க்கு எதிராக இந்திய போட்டி ஆணையம் இறுதி உத்தரவை பிறப்பித்தது.

கட்டுப்பாட்டுக் கொள்கை தொடர்பாக வியாபாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களை மாருதி சுசுகி நிறுவனம், நிறுத்தி வைக்கும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். அதோடு எம்எஸ்ஐஎல் (MSIL) நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

"எம்சிஐஎல் தனது டீலர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதை சிசிஐ கண்டறிந்தது, இதன் மூலம் எம்எஸ்ஐஎல் பரிந்துரைத்த தள்ளுபடியை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தடுக்கப்பட்டனர்."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எம்எஸ்ஐஎல் அதன் டீலர்களுக்காக ஒரு 'தள்ளுபடி கட்டுப்பாட்டு கொள்கையை' (Discount Control Policy)  வைத்திருந்தது, இதன் மூலம் டீலர்கள் எம்எஸ்ஐஎல் அனுமதித்ததைத் தாண்டி நுகர்வோருக்கு கூடுதல் தள்ளுபடிகள், இலவசங்கள் போன்றவற்றை வழங்குவதற்கு தடுக்கப்பட்டனர்.

Read Also | Tata SUV PUNCH காரை அறிமுகப்படுத்துகிறது டாடா… இதன் சிறப்பம்சங்கள்

ஒரு வியாபாரி, வாடிக்கையாளருக்கு கூடுதல் தள்ளுபடியை வழங்க விரும்பினால், அதற்கு அவர் MSIL இன் முன் ஒப்புதலை பெறவேண்டியது கட்டாயமாகும். அத்தகைய தள்ளுபடி கட்டுப்பாட்டு கொள்கையை மீறும் எந்தவொரு வியாபாரிக்கும், டீலர்ஷிப் மீது மட்டுமல்லாமல், நேரடி விற்பனை நிர்வாகி, பிராந்திய மேலாளர், ஷோரூம் மேலாளர், குழுத் தலைவர் உள்ளிட்ட தனிநபர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்டது.

2019இல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து CCI விசாரணையைத் தொடங்கியது. மாருதி அவர்கள் வழங்கும் தள்ளுபடிகளை மட்டுப்படுத்தும்படி கட்டாயப்படுத்துகிறது, அவர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை திறம்பட தடுத்து வந்ததாகவும், விநியோகஸ்தர்கள் சுதந்திரமாக செயல்பட விடப்படவில்லை என்றும், குறைந்த விலையில் பயனடையக்கூடிய நுகர்வோருக்கு தீங்கு விளைவிப்பதாகவும் மாருதி இந்தியா நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
 
இதேபோன்ற தள்ளுபடி கட்டுப்பாட்டு கொள்கை MSIL ஆல் இந்தியா முழுவதும் நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது - குறிப்பாக, ஒரே நகரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் செயல்படும் நகரங்களில் இந்த கட்டுப்பாடு அதிகமாக இருந்தது.

சமீபத்திய CCI விசாரணையில், தள்ளுபடி கட்டுப்பாட்டு கொள்கையை அமல்படுத்த, MSIL நியமித்த மர்ம ஷாப்பிங் ஏஜென்சிகள் ((Mystery Shopping Audit Report’) 'MSA கள்') வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறதா என்பதை அறிய MSIL டீலர்களிடம் வாடிக்கையாளர்கள் போல நடித்தனர். 

Also Read | எந்த ஸ்கூட்டர் சிறந்தது? முழு ஒப்பீடு இதோ!!

அவர்கள் மாருதி இந்தியா நிர்வாகத்திற்கு ஆதாரத்துடன் (ஆடியோ/ வீடியோ ரெக்கார்டிங்) தங்கள் கண்டுபிடிப்புகளை அனுப்பினார்கள். இந்த ரகசிய புலனாய்வின்படி, தவறு செய்த டீலருக்கு ஒரு 'மர்ம ஷாப்பிங் தணிக்கை அறிக்கை' உடன் ஒரு மின்னஞ்சல் அனுப்ப்படும். அதோடு, விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்படுகிறது. 

விநியோகஸ்தர்கள் அளிக்கும் விளக்கம் நிறுவனத்திற்கு திருப்தியளிக்கவில்லை என்றால், விநியோகஸ்தர் மற்றும் அதன் ஊழியர்களுக்கு, கார்களை விநியோக்கிப்பதை நிறுத்தப்படும் என்ற அச்சுறுத்தல் விடப்படும்.  

எனவே, எம்சிஐஎல், தனது தயாரிப்பை விற்கும் விநியோகஸ்தர்கள் மீது தள்ளுபடி கட்டுப்பாட்டு கொள்கையை விதித்தது மட்டுமல்லாமல், எம்எஸ்ஏ மூலம் டீலர்களை கண்காணித்து, அவர்களுக்கு அபராதம் விதித்தது. விநியோகத்தை நிறுத்துதல், அபராதம் வசூலித்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. மாருதி நிறுவனத்தின் இந்த செயல், இந்தியாவிற்குள் போட்டியிடுவதில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது. இவை, 2002ஆம் ஆண்டின் CCI விதிமுறைகளின் பிரிவு 3 (4) (e) பிரிவு 3 (1) உடன் போட்டி சட்டத்தின் விதிகளுக்கு முரணானது என கண்டறியப்பட்டது.

சிசிஐ உத்தரவுக்கு பதிலளித்த மாருதி சுசுகி நிறுவனம், “23 ஆகஸ்ட் 2021 தேதியிட்ட சிசிஐ உத்தரவை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை எடுப்போம். MSIL எப்பொழுதும் நுகர்வோரின் நலன்களுக்காகவே செயல்பட்டு வருகிறது, எதிர்காலத்திலும் இதைத் தொடரும்“ என்று தெரிவித்துள்ளது.

Also Read | 10 ஆப்கன் சிறுமிகளை மீட்ட 11 குழந்தைகளின் அமெரிக்க அன்னை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News