சொத்து விற்று வருமானம் ஈட்டியவரா? வருமான வரித் தாக்கல் தொடர்பான முக்கிய விவரங்கள்!

ITR Filing 2024 : யார் எந்த படிவத்தை பூர்த்தி செய்வது? வருமான வரி தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2024, 05:07 PM IST
  • 2023-24க்கான வருமான வரி தாக்கல்
  • வருமான வரியும் ஆவணங்களும்
  • ஜூலைக்குள் வருமான வரி தாக்கல் செய்யவும்...
சொத்து விற்று வருமானம் ஈட்டியவரா? வருமான வரித் தாக்கல் தொடர்பான முக்கிய விவரங்கள்! title=

2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஜூலை 31 கடைசி தேதி தானே என்று கணக்கு தாக்கல் செய்வதில் காலதாமதம் செய்ய வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் ரிட்டன் தாக்கல் செய்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் பணம் உங்கள் கணக்கில் வந்து சேரும். ஆனால், ரிட்டன் தாக்கல் செய்வதற்கு முன்,அனைத்துவித தகவல்களையும் தயாராக வைத்துக் கொள்வது முக்கியம்.

ஐடிஆர் தொடர்பான ஆவணங்களின் பட்டியல்

வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் எவை? உங்களுக்கு ஏன் அவை தேவை? என்பதைத் தெரிந்துக் கொள்வோம். எனென்றால் வெவ்வேறு ஆவணங்களில் நாம் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்வது முக்கியமானது.  வரி வரம்புக்கு ஏற்றவாறு ஐடிஆர் ஆவணங்கள் மாறுபடும். உங்கள் வருமானமும் முதலீடு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல எந்த ஆவணங்களை பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொண்டு அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும்.

வரி வரம்பு எது என்பது தெரிந்துக் கொண்டு படிவத்தை பூர்த்தி செய்வது ஒருபுறம் என்றால், தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள் மூன்று வகைப்படும்.

வருமான வரி தாக்கல் செய்யத் தேவையான மூன்று வகை ஆவணங்கள்

வருமானம் மற்றும் முதலீட்டுச் சான்று

வரி அறிக்கை

தனிப்பட்ட விவரங்கள்.

இந்த மூன்று வகை ஆவணங்களைப் பற்றி விவரமாக தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | வரி செலுத்துவோர் கவனத்திற்கு! ஜூலை 31 க்கு முன் ITR தாக்கல் செய்து விடுங்கள்!

வருமானம் மற்றும் முதலீட்டுச் சான்று

வருமானம்: ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, ​​ஒரு நிதியாண்டில் சம்பாதித்த வருமானம்  மற்றும் அவற்றை எப்படி, எங்கு முதலீடு செய்தீர்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரும் FD, ELSS போன்ற வரிச் சேமிப்புக் கருவிகளில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், அது தொடர்பான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்கவும்.

வீட்டுக் கடன்: வீடு வாங்குவதற்கு வாங்கியிருந்தால், அதற்கு வரி விலக்கு கிடைக்கும். அசல் தொகைக்கு செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு கோரலாம், இதற்காக நீங்கள் வீட்டுக் கடன் கட்டியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.  

சொத்து விற்பனை: பங்குகள், பத்திரங்கள், அசையும்/அசையா சொத்துக்களை விற்று பணம் சம்பாதித்திருந்தால், அதையும் வருமான வரிக் கணக்கில் காட்ட வேண்டும், சொத்து விற்பனைத் தொடர்பாக தரகர் அறிக்கை, சொத்து விற்பனை பத்திரம் போன்றவற்றை வழங்க வேண்டியிருக்கும். அதேபோல பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை டிமேட் கணக்கு அறிக்கை மூலம் காட்டலாம்.

வாடகை: உங்கள் சொத்தை வாடகைக்கு விட்டு சம்பாதித்தால், அது தொடர்பான தகவலை வெளியிட வேண்டும். அதேபோல, வாடகைக்கு வசிப்பவராக இருந்தால், வீட்டு உரிமையாளரிடமிருந்து வாடகை செலுத்தியதற்கான ரசீதைப் பெற்று, அதைச் சமர்ப்பித்தால், வரியைச் சேமிக்கலாம். இந்த ஆவணங்களை நீங்கள் இணைக்க வேண்டியதில்லை, ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

வரி அறிக்கை/படிவம் 16

சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனம் கொடுக்கும் படிவம் 16இல் சம்பளம் மற்றும் டிடிஎஸ் பிடித்தம் பற்றிய விவரங்கள் இருக்கும். இரண்டு பகுதிகளைக் கொண்ட படிவம் A மற்றும் B உங்கள் சம்பளம் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும்.

மேலும் படிக்க | இந்த காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி... ஹூண்டாயின் இந்த அறிவிப்புக்கு என்ன காரணம் தெரியுமா?

படிவம் 16இன் பகுதி Aவில் உங்கள் சம்பளத்தில் எவ்வளவு வரி கழிக்கப்பட்டது என்பதையும் முதலாளியின் PAN மற்றும் TAN எண்களைக் காட்டும். அதே நேரத்தில் படிவம் 16இன் பகுதி B இல் மொத்த சம்பளத்தொகை மற்றும் அவை எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும்.  

படிவம்-16A/படிவம்-16B/படிவம்-16C

சம்பளம், வட்டி போன்றவை பற்றிய தகவல்கள் படிவம் 16Aவில் காணப்படும். நீங்கள் ஒரு சொத்தை விற்றால், உங்களிடம் இருந்து அதை வாங்குபவர் 16B படிவத்தை உஞ்களுக்குத் தருவார். 16C படிவம் வாடகை TDS விலக்கு விவரங்களை கொண்டதாக இருக்கும்.

படிவம் 26AS மற்றும் AIS
படிவம் 26AS ஒரு வரி பாஸ்புக் போன்றது. அதில் நீங்கள் டெபாசிட் செய்த வரி விவரங்கள் இருக்கும். டிடிஎஸ் கழிக்கப்பட்டிருந்தால், அதுவும் அதில் இருக்கும். பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், இந்தப் படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை சரிபார்க்க வேண்டும்.

தனிப்பட்ட விவரங்கள்
வருமான வரித்துறையால் வழங்கப்படும் PAN ஆவணம் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதார் அட்டையுடன் இணைப்பு இருந்தால், ரிட்டர்ன் தாக்கல் செய்வது எளிதாகிவிடும். ஐடி சட்டத்தின் பிரிவு 139AA இன் படி, வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயமாகும்.

வங்கி விவரங்கள்- வங்கி அறிக்கை/பாஸ்புக்
ஐடிஆர் தாக்கல் செய்ய, உங்களின் அனைத்து வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் வழங்க வேண்டும். வங்கியின் பெயர், கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி உட்பட வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் எத்தனை கணக்குகள் உள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும். எந்தக் கணக்கில் வரியைத் திரும்பப் பெற விரும்புகிறீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

ஒரு நிதியாண்டில் உங்கள் சேமிப்புக் கணக்கில் வட்டி மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதைச் சரிபார்க்க, வங்கி அறிக்கை அல்லது பாஸ்புக்கின் நகலையும் தர வேண்டும்.

மேலும் படிக்க | விற்பனைக்கு வரும் Oppo Reno 12F 5G... இதுல AI Eraser இருக்கு... லீக்கான தகவல்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News