#Cauvery: வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறிய வேண்டும்: ரஜினிகாந்த் ட்வீட்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகவும் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. 

Last Updated : Apr 11, 2018, 10:38 AM IST
#Cauvery: வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறிய வேண்டும்: ரஜினிகாந்த் ட்வீட்! title=

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.

இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம், அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, நேற்று காலை நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர், காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய போராட்டத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 

மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவர்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 63 பேர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 75 பேர், நாம் தமிழர் கட்சி 237 பேர், தமிழர் எழுச்சி இயக்கத்தின் 32 பேர் என மொத்தம் 780 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதனிடையே சென்னையில் ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தியதாக கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்ட 500 பேர் மீது 5 பிரிவின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நடந்த இச்சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்:- போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து வீடியோவுடன் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவர்கள் தாக்கப்படுவது தான் இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும் என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Trending News