கலை கட்டும் வசந்த நவராத்திரி: 2-ம் நாளாக அலைமோதும் பக்தர் கூட்டம்!

வசந்த நவராத்தியின் இரண்டாம் நாளான இன்று, அலகாபாத்தில் உள்ள அலோபி தேவி கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்து வருகின்றனர். 

Last Updated : Mar 19, 2018, 11:39 AM IST
கலை கட்டும் வசந்த நவராத்திரி: 2-ம் நாளாக அலைமோதும் பக்தர் கூட்டம்!  title=

வசந்த நவராத்தியின் இரண்டாம் நாளான இன்று, அலகாபாத்தில் உள்ள அலோபி தேவி கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்து வருகின்றனர். ஒரு வருடத்திற்கு அம்பாளின் வழிபாட்டிற்குரியதாக நான்கு நவராத்திரிகள் நிகழ்கின்றன. 

அதில் பங்குனி அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்று பெயர். 

இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து கொண்டாடுவதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. இந்த திருநாளில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறுவது வழக்கம்.

எனவே, அலகாபாத்தில் தற்போது இரண்டாம் நாளான இன்று, நவராத்திரி களை கட்டி வருகின்றது. மக்கள் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளுடன் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்து மகிழ்சியை தெரிவித்து வருகின்றார்.

நவராத்திரியில் பெண்கள் செய்ய வேண்டியவை:

>நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

>விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்

>நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

>ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

>நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

>பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

Trending News