சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. இதையடுத்து, லைகா நிறுவனம் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அமலாக்க துறையினர் அந்த நிறுவனத்தில் இன்று சாேதனையில் ஈடுபட்டுள்ளனர்.
லைகா நிறுவனத்தில் ரைடு:
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல படங்களை தயாரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்திருந்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் 300 கோடியை கடந்துள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து, லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள 8 இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பாஜக இனிமேல் இதை செய்யவே முடியாது - திருமாவளவன்!
காரணம் என்ன?
லைகா நிறுவனம், வரிசையாக பல படங்களை தயாரிக்கிறது. அனைத்துமே பெரிய ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்கள். லைகா நிறுவனம் 2022-2023 நிதியாண்டிற்கான தங்களது வருமானத்தை மறைத்து பொய்க்கணக்கு காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் லைகா நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை?
லைகா நிறுவனம் பொய்க்கணக்கு காட்டியது மட்டுமல்லாமல் சட்ட விரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு!
இன்று காலை 7 மணி முதல் நடைப்பெற்று வரும் சோதனையில் எந்த வித சலசலப்பும் குழப்பமும் ஏற்படாமல் இருப்பதற்காக அங்கே துப்பாக்கி ஏந்திய ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அமலாக்கத்துறையினர் கைப்பற்றும் ஆவணங்கள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால், சோதனை நடத்தி வரும் அதிகாரிகள் பண பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் உள்பட பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முறைகேடான ஆவணங்கள் சிக்கினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலினிற்கு ஆபத்து?
தற்போது வரை வெளியாகியுள்ள தகவல்களின் படி, அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்திற்கு லைகா நிறுவனம் ரூபாய் 1 கோடி அளித்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி ரவீந்திரநாத்திற்கு லைகா நிறுவனம் 8.5கோடி ரூபாய் வழங்கியுள்ளதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரனையில் இவர்கள் இருவரிடத்திலும் விசாரனை மேற்கொள்ளப்படும் என நம்பப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ