ராசிபலன்: வெளிவட்டாரத்தில்அந்தஸ்து உயரும் நாள் இன்று...

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்....

Last Updated : Nov 11, 2019, 05:47 AM IST
ராசிபலன்: வெளிவட்டாரத்தில்அந்தஸ்து உயரும் நாள் இன்று... title=

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்....

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழை வதால் மனதில் ஒருவித பய உணர்வு வந்து போகும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலை ஆட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்ப ங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில்அந்தஸ்து உயரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியா பாரத்தில் புதிய சூட்சமங்களை  உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். சிறப்பான நாள்.

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கும். பிள்ளை களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்தியோகத்தில் அதிகாரத்தின் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப் பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளி வான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடங் குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பி டாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். அலைச்சல் அதிகரிக்கும்  நாள்.

துலாம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்க்கு மதிப்பளிப்பார்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றி அடையும் . வியாபாரத்தில் புதிய சலுகை களை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். திறமை வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகார பதவியில் இருப்பவர்கள் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையாக கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு: புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

மகரம்: எதிர்பார்த்ததில் சில விஷயங்கள் தள்ளிப்போனாலும், எதிர்பாராத விஷயங்கள் முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும் . வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்கு தாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களில் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் நெருக்க மாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாகக் கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்கு கள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோ கத்தில் தலைமையின்  நம்பிக்கையை பெறு வீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.

Trending News