புது டெல்லி: இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் JEE (முதன்மை) மற்றும் நீட் (NEET) தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிடப்பட்டு உள்ளது.
பரீட்சை அரங்குகளுக்குள் சரியான சமூக தூரத்தை உறுதி செய்வதற்காக, ஒரு அறைக்கு மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, முந்தைய 24 லிருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல JEE முதன்மை தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு அறையில், அதிக மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு மாற்று இருக்கைகள் கொடுக்கப்படும்.
தேர்வு அறைக்கு வெளியே சமூக தூரத்தை உறுதி செய்வதற்காக, நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் தனித்தனியாக அமைக்கப்படும்.
மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சென்றுவர பயண ஏற்பாடுகளை செய்து தருமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் தேர்வு மையங்களை அடைய முடியும்.
மாணவர்களின் கல்வி ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இந்த தேர்வுகள் இப்போது பின்வருமாறு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது:
1. செப்டம்பர் 1-6 அன்று JEE (முதன்மை)
2. செப்டம்பர் 13 அன்று நீட் (யுஜி)