மக்களை தவிக்க விட்டு சென்ற தலைவர் ராகுல் காந்தி -ஒவைசி...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்!

Last Updated : Oct 15, 2019, 08:08 AM IST
மக்களை தவிக்க விட்டு சென்ற தலைவர் ராகுல் காந்தி -ஒவைசி...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்!

காங்கிரஸ் கப்பல் மூழ்குவதை கண்டு, அமைதியாக வெளியேறிய கேப்டன் தான் ராகுல் என ராகுல் காந்தியை ஒவைசி விமர்சித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்., ஒரு கப்பல் மூழ்கும்போது, ​​கேப்டன் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி காக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்தி ஒரு கேப்டனாக இருந்து காங்கிரஸ் கப்பல் மூழ்குவதைக் கண்டு பயந்து வெளியேறியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பிவாடி மேற்கில் தன் கட்சி வேட்பாளருக்கான பிரச்சாரத்தின் போது ஒவைசி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தனது உரையில் அவர் குறிப்பிடுகையில்., "ஒரு கப்பல் கடலின் நடுவில் மூழ்கும்போது, ​​கேப்டன் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவார், ஆனால் காங்கிரஸ் மூழ்குவதைக் கண்டு காந்தி தானே வெளியேறிய ஒரு கேப்டன். 70 ஆண்டுகளாக காங்கிரஸ் நம்மீது காட்டிய கருணையால் முஸ்லிம்கள் உயிருடன் இல்லை, மாறாக அரசியலமைப்பு மற்றும் கடவுளின் கிருபையால் நாங்கள் உயிருடன் இருக்கிறோம்" என்று ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.

"முத்தலாக் சட்டம் அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் எதிரானது. பாஜக நீண்ட காலமாக நீடிக்கும் அரசாங்கம், அதாவது இந்த இருள் நீண்ட காலம் நீடிக்கும்" என்றும் முத்தலாக் சட்டத்தினை குறித்து பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்., மராட்டியர்களுக்கு வழங்கியதைப் போலவே முஸ்லிம்களுக்கும் அரசாங்கம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் ஒவைசி குறிப்பிட்டு பேசினார். ஒவைசியின் இந்த கருத்துகள் தற்போது காங்கிரஸார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories

Trending News