காந்திய கொள்கையை ஏற்றுக்கொண்டது தான் BJP வெற்றியின் ரகசியம்!

காந்திய கொள்கைகளை ஏற்றுக்கொண்டது தான் மோடியின் வெற்றி ரகசியம் என்று மோடியை காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டி பாராட்டு!!

Last Updated : May 29, 2019, 09:59 AM IST
காந்திய கொள்கையை ஏற்றுக்கொண்டது தான் BJP வெற்றியின் ரகசியம்!

காந்திய கொள்கைகளை ஏற்றுக்கொண்டது தான் மோடியின் வெற்றி ரகசியம் என்று மோடியை காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டி பாராட்டு!!

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம், தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் 2-வது முறை பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், கேரள காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டி மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். காந்திய கொள்கைகளை ஏற்றுக்கொண்டது தான் மோடியின் வெற்றியின் ரகசியம் என்று கூறிய அப்துல்லா, ஸ்வச் பாரத் அபியான் திட்டம், திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்க, வீட்டிற்கு கழிவறை கட்டிக்கொடுத்தது போன்ற திட்டங்களையும் பாராட்டியுள்ளார். மேலும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், ஏழை குடும்பங்களுக்கு 50 மில்லியன் LPG சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டதையும் புகழ்ந்தார்.

இந்நிலையில், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மோடியை பாராட்டி பேசிய அப்துல்லாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார். அப்துல்லா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது கருத்து எனவும், காங்கிரஸ் தலைவர்கள் மோடியை புகழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

More Stories

Trending News