ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவிப்பு! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 12:56 PM IST
    1. வேறு கட்சியில் சேர்ந்தாலும் எப்போதும் ரஜினி ரசிகர்கள் என்பதை மறக்கக் கூடாது.
    2. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த கட்சியிலும் இணையலாம்.
ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர் title=

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவிப்பு! 

அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக பல ஆண்டுகளாக கூறி வந்த ரஜினிகாந்த் (Rajinikanth), அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார். ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவேன் என உறுதிப்பட தெரிவித்த அவர், உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்து விட்டார். ரஜினியின் அரசியல் வருகையை பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கும் ரஜினி மக்கள் மன்ற (Rajini Makkal Mandram) நிர்வாகிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

ரஜினியை அரசியலுக்கு அழைத்து சென்னை (Chennai) வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் போராட்டம் நடத்தியும், தனது முடிவை ரஜினி மாற்றிக் கொள்வதாக இல்லை. தான் அரசியலுக்கு வரப்போவதில்லை (Rajinikanth Political Entry) என திட்டவட்டமாக தெரிவித்த அவர், இது போன்ற போராட்டங்கள் நடத்தி தன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் ரஜினி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பது உறுதியானதால், மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

ALSO READ | ரஜினி மக்கள் மன்ற செயலாளர் AJ.ஸ்டாலின் திமுகவில் இணைந்தார்..!

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்., ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், அரசியலில் ஆர்வம் கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

No description available.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News