பாலுடன் நெய் கலந்து குடித்தால் போதும்: மூட்டு வலி முதல் தூக்கமின்மை வரை.. அனைத்தும் குணமாகும்

Health Tips: பாலில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2023, 04:14 PM IST
  • ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கும்.
  • உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
  • எலும்புகள் வலுவடையும்.
பாலுடன் நெய் கலந்து குடித்தால் போதும்: மூட்டு வலி முதல் தூக்கமின்மை வரை.. அனைத்தும் குணமாகும் title=

Health Tips: நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளிலேயே நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. இவற்றில் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அவற்றால் பல பிரத்யேகமான, குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி ஒரு உணவு சேர்க்கையை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நெய்யுடன் பால் சேர்த்தால் கிடைக்கும் பயன்கள் (Milk With Ghee Benefits): 

பால் ஒரு முழுமையான உணவாக அறியப்படுகிறது. ஏனெனில் அதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் அதில் பாலில் இருந்து கிடைக்கும் மற்றொரு சிறப்பம்சம் வாய்ந்த பால் பொருளை கலந்தால் அதனால் கிடைக்கும் நன்மை பன்மடங்கு அதிகரிக்கும். அந்த தனிச்சிறப்பு வாய்ந்த பால் பொருள் நெய் ஆகும். நெய்யை திரவ தங்கம் என்று அழைத்தால் அதை மறுப்பதற்கில்லை. பாலில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

பாலில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

1. ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கும் (Nutrient Absorption)

நெய் சேர்ப்பது பாலில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை (வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே) உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால் உடலில் அவற்றின் இருப்பு கணிசமாக அதிகரிக்கிறது. உங்கள் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2. உடலுக்கு ஆற்றல் கிடைக்கும் (Energy)

நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவை நமக்கு தொடர்ச்சியான ஆற்றலைத் தருகின்றன. இதன் மூலம் உடல் செயல்பாடுகளுக்கு பெரிய அளவிளான உதவி கிடைக்கிறது. இதனால்தான் இந்த சிறந்த பால் தயாரிப்பை பாலுடன் கலந்து குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | உங்க குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் ‘இந்த’ உணவுகளை கொடுக்கவே கொடுக்காதீங்க!

3. எலும்புகள் வலுவடையும் (Strong Bones)

நெய் மற்றும் பாலின் கலவையானது உடலுக்கு அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நெய் மூட்டுகளுக்கு இயற்கையான லூப்ரிகண்டாகவும் செயல்படுகிறது. இது மூட்டு வலியின் (Home Remedy For Strong Bones) அபாயத்தைக் குறைக்கிறது.

4. நிம்மதியான உறக்கம் கிடைக்கும் (Good Sleep)

தூக்கமின்மையால் சிரமப்பட்டு, நிம்மதியான உறக்கத்தைப் பெற விரும்புபவர்கள், தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் நெய் கலந்து குடிக்கவும். இது அவர்களின் தூக்கமின்மை பிரச்சனையை (Home Remedy For Good Sleep) தீர்க்கும்.

பால் குடிக்க சரியான நேரம் எது?

பால் குடிக்க சரியான நேரம் எது? பெரியவர்களுக்கு பால் குடிக்க சரியான நேரம் எப்போதும் இரவில் தூங்குவதற்கு முன் என்று கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு காலை நேரம் சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அவர்கள் விளையாட்டு போன்ற செயல்களில் அதிக சுறுசுறுப்பாக இருப்பார்கள். இரவில் தூங்கும் முன் பால் குடிப்பதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். 

ஒரு நாளைக்கு எவ்வளவு பால் உட்கொள்ளலாம்? 

குழந்தைகளுக்கு நாள் முழுவதும் 2-3 கப் பால் வரை கொடுக்கலாம். பெரியவர்கள் தினமும் 2 கிளாஸ் பால் வரை குடிக்கலாம். பாலின் அளவும் அதை ஜீரணிக்கும் நபரின் திறனைப் பொறுத்தது. ஏனெனில் சிலருக்கு பால் எளிதில் ஜீரணமாகும், சிலருக்கு செரிமானம் செய்வதில் சிரமம் இருக்கும்.

மேலும் படிக்க | வேகமா உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான ஆயுர்வேத டிப்ஸ்: ஒரே வாரத்தில் வித்தியாசம் தெரியும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News