தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் இதய நோய், குறிப்பாக பக்கவாதம் ஆகியவற்றின் பிடியில் சிக்கிக் கொள்கின்றனர். இருதயநோய் நிபுணர்களும் ஹார்மோன்களே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதுகின்றனர். சில சமயங்களில் ஆரோக்கியமாக இருக்கும் பெண்களும் கூட இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அவர்களின் மோசமான வாழ்க்கை முறை மற்றும் மரபணுக்கள் இரண்டும் காரணமாக இருக்கலாம். உடல்நலம் தொடர்பான எந்த பிரச்சனையும் ஏற்படுவதற்கு முன்பே நம் உடல் அறிகுறிகளை கொடுக்கத் தொடங்குகிறது. சரியான நேரத்தில் அவற்றை அடையாளம் கண்டு கவனமாக இருக்க வேண்டும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு பெண்களிடம் (முன் மாரடைப்பு அறிகுறிகள்) காணப்படும் அறிகுறிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
இதய ஆரோக்கியத்தில் ஹார்மோன்களின் தாக்கம் என்ன?
அதிக ஹார்மோன் அளவுகள், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன், இரத்த நாளங்களை அதிகம் பாதிக்கிறது. நாளங்களின் நீட்சி காரணமாக, தமனி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். பெண்கள் பெரும்பாலும் புறக்கணிக்கும் மாரடைப்பின் சில அறிகுறிகளைப் பற்றி நிபுணர்கள் கூறியுள்ளனர், அதை தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை
மாரடைப்பு வருவதற்கு முன் பெண்களிடம் இந்த 5 அறிகுறிகள் தென்படும்
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பே, உடல் சிக்னல்களை கொடுக்கத் தொடங்குகிறது என்று மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் நீரஜ் குமார் விளக்குகிறார். எனவே உடலில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
* எலும்புகளில் வலி.
* மார்பு வலி.
* மயக்கம் மற்றும் பலவீனம்,
* தலைவலி மற்றும் தலைச்சுற்றலுடன் மூச்சுத் திணறல்.
* விரைவான இதயத் துடிப்பு
பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்
அதிக கொழுப்புச்ச்த்து
ஊடக அறிக்கைகளின்படி, உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜனின் அளவு பெண்களை அதிக கொழுப்பிலிருந்து பாதுகாக்கிறது, ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு, பெண்களில் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையத் தொடங்குகிறது, இதன் காரணமாக உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக, மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம்
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது மிகவும் பொதுவானது, இது மாரடைப்புக்கு வழிவகுக்கும். இது தவிர, சில பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
உடல் பருமன் மற்றும் நீரிழிவு
உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்களும் பெண்களுக்கு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன. இது தவிர, புற்றுநோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற நிலைகளிலும் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும்.
இதய அடைப்பு அறிகுறிகள்
- விரைவான இதயத் துடிப்பு
- மார்பு வலி
- தலைசுற்றல்
- சுவாசிப்பதில் சிரமம்
- சோர்வு
- மயக்கம்
- வயிறு மற்றும் மார்பில் ஒரே நேரத்தில் வலி
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ