அரசாணிக்காயை இப்படி சாப்பிட்டா சர்க்கரை குறையும், இடுப்பு ஊளைச்சதை கரையும்

Weight Loss Drink: உடல் எடையை குறைக்க மட்டுமல்ல, பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும் பூசணிக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்ட அற்புதமான காய் ஆகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 6, 2023, 02:35 PM IST
  • உடல் எடையை குறைக்கும் பூசணி
  • பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் பூசணிக்காய்
  • நார்ச்சத்து அதிகம் கொண்ட அற்புதமான காய் அரசாணிக்காய்
அரசாணிக்காயை இப்படி சாப்பிட்டா சர்க்கரை குறையும், இடுப்பு ஊளைச்சதை கரையும் title=

பூசணி சாறு நன்மைகள்: சாம்பல் பூசணி, அரசாணிக்காய், பரங்கிக்காய், சிவப்பு பூசணி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மஞ்சள் பூசணி ஒரு நீர்க்காய் ஆகும். இதிலுள்ள நீர் உள்ளடக்கம் மற்றும் ஊட்டச்சத்துக்கள், நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

100 கிராம் அளவு அரசாணிக்காயை  நன்றாக கழுவி தோலுடன் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் நோயே அண்டாது. ஆனால், இந்த ஜூஸை காலையில் குடித்தால் தான் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் பூசணிச்சாறு  
பூசணி சாறு சுவை நிரம்பியது. பச்சையாக உட்கொண்டால் தான் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இந்த சாற்றை குடிக்க வேண்டும். இது நச்சுத்தன்மைக்கு சிறந்த இந்த சாறு, உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் நமது அமைப்புகளில் இருந்து நச்சுகள் மற்றும் மாசுகளை நீக்குகிறது

பூசணி சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்
எடை இழப்பு: பூசணி சாற்றில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி அளவு உள்ளது. அதிக நீர் உள்ளடக்கம் இருப்பதால் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் எவருக்கும் இது ஒரு சிறந்த வழியாகும். இதிலுள்ள நார்ச்சத்து  நீண்டநேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். பசி எடுக்காததால், அதிக உணவைத் தவிர்க்க உதவுகிறது. இதனால் மொத்த கலோரி நுகர்வு குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க | கண்ணுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் அழகைத் தரும் ராஸ்பெர்ரியின் ஆரோக்கிய நன்மைகள்

சத்துக்கள் நிறைந்த பானம்: பூசணிக்காயின் சாறு சத்து நிறைந்தது. நியாசின், தியாமின், வைட்டமின் சி மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றின் முக்கிய அளவுகளைக் கொண்டுள்ளது. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுக்களும் இதில் உள்ளன.

இளமையை தக்க வைக்கும் பானம்: பூசணி சாற்றின் ஆரோக்கிய நன்மைகள், நமது சருமத்தில் பிரதிபலிக்கின்றன. பூசணிக்காயை  ஃபேஸ் க்ரீம் தயாரிக்கவும் பயன்படுத்துவதற்குக் காரணம், அதில், வயதாகும் தன்மையை தள்ளிப்போட உதவியாக இருக்கும் சத்துக்கள் உள்ளது என்பது தான்

ஆற்றலை அதிகரிக்கிறது: சாம்பல் பூசணியில் உள்ள வைட்டமின் பி3, ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இரத்த சோகை மற்றும் உடல் பலவீனம் உள்ள அனைவருக்கும், இது நன்மை பயக்கும்.

நீரிழிவு மேலாண்மை: பூசணி சாற்றில் கொழுப்பு இல்லை என்பதோடு, கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. இந்த ஊட்டச்சத்துகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். 

எனவே, அடுத்த முறை நீங்கள் எப்படி சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் காலைப் பொழுதைக் கழிப்பது என்று யோசிக்கும்போது, ஒரு கிளாஸ் பூசணி சாற்றை முயற்சிக்கவும். உங்கள் ஆரோக்கியத்திலும் மனதிலும் மாற்றங்களை செய்யக்கூடிய பூசணிச்சாறு ஒரு சூப்பர்ஃபுட் என்றால் அதை யாராலும் மறுக்கமுடியாது. 

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Prune For Health: அனீமியா, செரிமானக் கோளாறுகளை போக்கும் கொடிமுந்திரி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News