சுகர் லெவலை சுலபமா குறைக்க காலையில் இந்த டீ குடிங்க போதும்

Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் காலையில் உட்கொள்ளும் முதல் பானம் முதல் இரவு உட்கொள்ளும் கடைசி உணவு வரை அனைத்தையும் மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 10, 2024, 10:54 AM IST
  • துளசி டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்துள்ளன.
  • துளசி இலைகள் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
  • இதை தேநீராக செய்து உட்கொள்வது வேகமாக சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
சுகர் லெவலை சுலபமா குறைக்க காலையில் இந்த டீ குடிங்க போதும் title=

Diabetes Control Tips: ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் சீரற்ற வாழ்க்கை முறை காரணமாக இந்நாட்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு இவர்களுக்கு மிக அவசியம். நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால், அதன் பிறகு அதற்கு நிரந்தர தீர்வு கிடையாது என்பது கசப்பான உண்மையாகும். எனினும், ஆரோக்கியமான மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை உட்கொண்டால் இதை கட்டுக்குள் வைக்கலாம். 

நீரிழிவு நோயாளிகள் காலையில் உட்கொள்ளும் முதல் பானம் முதல் இரவு உட்கொள்ளும் கடைசி உணவு வரை அனைத்தையும் மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். உணவில் அதிகப்படியான கவனம் செலுத்தினால்தான் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும்.

நம் அனைவருக்கும் பொதுவாக காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்துவது பழக்கமாக உள்ளது. ஆனால், பெரும்பாலும் இதில் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுவதால், நீரிழிவ் நோயாளிகளுக்கு இதை அருந்துவது சற்று கடினமாக இருக்கும். சர்க்கரை கலந்த டீ இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் எந்த வித அச்சமுமின்றி தைரியமாக பருகக்கூடிய சில ஆரோக்கியமான தேநீர் வகைகளும் உள்ளன. அவற்றை குடித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அந்த டீ வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கிரீன் டீ (Green Tea)

கிரீன் டீ நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான டீகளில் ஒன்றாகும். க்ரீன் டீயில் உள்ள பாலிபினால்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

இலவங்கப்பட்டை தேநீர் (Cinnamon Tea)

இலவங்கப்பட்டை நீரிழிவு கட்டுப்பாட்டில் பெரிய அளவில் உதவும் ஒரு மசாலா ஆகும். இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் அளவுகளை சமநிலையில் வைக்கவும் உதவுகின்றது. இலவங்கப்பட்டை தேநீர் தயாரிக்க, ஒரு கப் வெந்நீரில் இலவங்கப்பட்டையை போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி குடிக்கவும்.

வெந்தய தேநீர் (Fenugreek Tea)

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைக்க வெந்தய டீ மற்றொரு சிறந்த வழியாக இருக்கும். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்கும். வெந்தய தேநீர் தயாரிக்க, ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். இதில் சுவை சேர்க்க எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.

மேலும் படிக்க | அபாயம்... இந்தியாவில் 30% இளைஞர்கள் காட்டும் அலட்சியம் - இந்த நோயால் கடும் பாதிப்பு வரலாம்!

ஓம தேநீர் (Ajwain Tea)

ஓமம் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஓம டீ தயாரிக்க, ஒரு கப் வெந்நீரில் நான்கில் ஒரு பங்கு ஓமத்தை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். சிறிது ஆறிய பின் வடிகட்டி குடிக்கவும்.

துளசி தேநீர் (Tulsi Tea)

துளசி டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. துளசி இலைகள் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இதை தேநீராக செய்து உட்கொள்வது வேகமாக சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். துளசி தேநீர் தயார் செய்ய, ஒரு கப் வெந்நீரில் சில துளசி இலைகளை சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும். அதன் பிறகு இதை பருகலாம். இது சுவைக்கு சிறிது தேனையும் சேர்க்கலாம். எனினும் குறைவான அளவிலேயே தேன் சேர்க்க வேண்டும். 

கவனத்தில் கொள்ளுங்கள்

இந்த டீகளை உட்கொள்ளும் போது சர்க்கரை அல்லது தேன் சேர்ப்பதை தவிர்க்கவும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த தேநீர் மட்டும் போதாது. ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவதும் முக்கியம்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | அனைத்து பிரச்சனைகளுக்கும் அருமருந்து! இஞ்சியில் இத்தனை நன்மைகள் இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News