பாகற்காய் சட்னி பலன்கள் மற்றும் செய்முறை: பாகற்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அதன் கசப்பான தன்மை காரணமாக, பலர் பாகற்காய் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறார்கள். பாகற்காய் சர்க்கரை நோய், யூரிக் அமிலம், இதயக் கோளாறுகளை குணமாக்கும், வயிற்றை சுத்தப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்த உதவும். எனவே பாகற்காயை காய்கறி வடிவில் உங்களால் சாப்பிட முடியாவிட்டால், அதனை சட்னி வடிவிலும் செய்து உட்கொள்ளலாம். அதன்படி சுவையான பாகற்காய் சட்னி செய்யும் செய்முறையை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
பாகற்காய் நன்மைகள்
>> பாகற்காய் இரத்தத்தை சுத்திகரிக்கும் அமுதம் போன்றது. இது நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே கால் கப் பாகற்காய் சாறுடன் சம அளவு கேரட் சாறு சேர்த்து குடிப்பது நீரிழிவு நோய்க்கு மிகவும் நன்மை பயக்கும்.
>> பாகற்காயில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது சளி, மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இதனால் உணவு செரிமானம் மேம்படும், பசியும் வெளிப்படுகிறது.
மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!
>> பாகற்காய் சாப்பிடுவது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். அந்தவகையில் நீங்கள் பாகற்காயை மசாலா சேர்க்காமல் சாப்பிடுவது ஆஸ்துமாவில் நன்மை பயக்கும்.
>> பாகற்காய் சாறு உட்கொள்வது வாயு மற்றும் அஜீரணத்திற்கு நன்மை பயக்கும்.
>> பாகற்காய் சாறு குடிப்பதால் கல்லீரலை பலப்படுத்தி கல்லீரல் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். அதேபோல் மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த ஜூஸை தினமும் குடித்து வரவும்.
>> பாகற்காயை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மேலும் எந்த வகையான தொற்று நோயாக இருந்தாலும் அவை குணப்படுத்திவிடும்.
>> பாகற்காய் சாற்றில் கருப்பு உப்பு கலந்து குடித்தால் வாந்தி-பேதி அல்லது காலரா உடனே நீங்கும்.
>> பாகற்காய் பக்கவாதத்திற்கு மிகவும் பயனுள்ள தீர்வாகும், இதில் பச்சையாக பாகற்காய் சாப்பிடுவது நோயாளிக்கு நன்மை பயக்கும்.
இப்போது நாம் சுவையான பாகற்காய் சட்னி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்?
பாகற்காய் சட்னி செய்ய, முதலில் பாகற்காய் நன்கு கழுவி, பின் பாகற்காய் இரண்டாக வெட்டி விதைகளை நீக்கவும். இப்போது அதை தண்ணீரில் போட்டு நான்கு கழுவி அதில் உப்பு தடவி 15 நிமிடம் நன்கு ஊறவைக்கவும். பின்பு அந்த பாகற்காயை துருவிக் கொள்ளவும்.
இப்போது கடாயை கேஸில் வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், சீரகம் சேர்த்து வதக்கவும், பின் அதனுடன் துருவிய பாகற்காய் சேர்த்து, இப்போது மிதமான தீயில் 10 நிமிடங்கள் சமைக்கவும். பிறகு 2 ஸ்பூன் கொண்டைக்கடலை, 1/2 கப் தேங்காய் துருவல், 1 ஸ்பூன் தனியா, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1.5 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கியதும், கேஸ்ஸை அனைத்து விடவும், ரெடி உங்களின் சுவையான பாகற்காய் சட்னி.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ