Air for Sale in UK: இந்த ஆண்டு முதலே உலகெங்கிலும் பலர் வெகு தொலைவில் சிக்கித் தவிக்கின்றனர். இங்கிலாந்தில், வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று காரணமாக பல நாடுகள் தங்கள் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதாவது தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த நாட்டுக்கு திரும்பி வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா (Coronavirus) தொற்றின் நோயின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இங்கிலாந்து நிறுவனம், அந்நாட்டு மக்களுக்கு "காற்று பேக்கேஜ்" வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தனியார் நிறுவனமான MY BAGGAGE நிறுவனம் தற்போது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.
அதாவது 500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலில் உள்ள காற்றின் விலை 2500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வருகிறது. அதன் காற்று தேவைப்படும் போதெல்லாம் அதைத் திறந்து காற்றை சுவாசித்து விட்டு, பின்னர் அதை அடைத்து வைத்துக்கொள்ளலாம்.
இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளைத் தவிர, வேறு எந்த பகுதியிலும் நிறுவனம் சிறப்பு "காற்று பேக்கேஜ்" விற்பனையை தொடங்க வில்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட காற்றை ஆகாய மார்க்கமாக சப்ளை செய்கிறது.
ALSO READ | கொரோனா வைரஸ் பெண்கள் மற்றும் ஆண்களை வித்தியாசமாக பாதிக்கிறதா?
இடம்பெயரும் பிரிட்டன் மக்களுக்கு, சொந்த நாட்டின் காட்டின் வாசனை உணர்வை இணைக்கும் நோக்கத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்ட பின்னர் பாட்டில் காற்றை விமான மூலம் சப்ளை செய்ய ஊக்கமளித்ததாக நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
Bottles of 'fresh air' from England, Ireland, Scotland and Wales can be shipped for 25.The company, My Baggage, explained that 'each 500ml of air comes with a cork so the owners can open it for a moment, take a breath and quickly close again, can be used for weeks or months pic.twitter.com/QG20dCrGA7
— @slyballe (@BalleSulaimon) December 21, 2020
"நாங்கள் அவர்களுக்கு [UK Residents Living Abroad] சொந்த மண்ணின் காற்றை சுவாசிப்பதன் மூலம் மீண்டும் இணைக்க உதவ விரும்பினோம். உணர்ச்சிகளைப் பொறுத்தவரை எங்கள் திட்டம் அவர்களுக்கு சொந்த நாட்டில் வாழ்வது போல உணர்வை தூண்டும்" என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
மை பேக்கேஜின் கூற்றுப்படி, பெரும்பாலான ஆர்டர்கள் வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு பரிசாக பாட்டில்களை அளிக்க விரும்புவர்களிடமிருந்து வருகின்றன என்றார்.
ALSO READ | Health Insurance எடுக்கப் போறீங்களா? என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது
மாசுபட்ட சீன நகரங்களான பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நாடுகளில் வகிக்கும் பிரிட்டன் மக்களுக்கு 580 மில்லி பாட்டில்கள் 115 டாலருக்கு விற்கத் தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்திலும் "காற்று பேக்கேஜ்"அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR