சிலர் அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுவார்கள். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால், சிலர் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், நீர் சத்து பற்றாக்குறை போன்றவை. அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டால், அதற்கு எளிதில் தீர்வு காணலாம். தலைவலி வந்த உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அதிக அளவில் வலி நிவாரணி எடுத்துக் கொள்வது, உடலுக்கு கேடானது.
நாள் முழுவதும் வேலை அழுத்தம் மற்றும் பிற மன அழுத்தம் காரணமாக தலைவலி அடிக்கடி தொடங்குகிறது, இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் பல்வேறு வகையான தலைவலிகள் உள்ளன என்பதையும், அதன் உள் காரணங்களும் வேறுபட்டவை என்பதையும் புரிந்துகொள்வது அவசியம். சில வகையான தலைவலிகள் மிகவும் கடுமையானவை அல்ல. ஆனால் சில வகையான தலைவலிகளில் வலி மிகவும் தீவிரமானது, அதை புறக்கணிப்பது கடினம். காலையில் எழுந்ஹிருக்கும் போதே ஏற்படும் தலைவலியும் இதே போன்ற ஒன்று. இது புறக்கணிக்க மிகவும் கடினமாகிறது. உங்களுக்கும் காலையில் கடுமையான தலைவலி இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கட்டுரையில், காலை தலைவலியைப் போக்க உதவும் ஒரு சிறப்பு வீட்டு வைத்தியம் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
காலை தலைவலியை போக்கும் டீ
பெரும்பாலானோர் தலைவலி வரும்போது டீ தயாரித்து அருந்துவதை அடிக்கடி பார்த்ததுண்டு, டீ குடிப்பதால் தலைவலியில் இருந்து நிறைய நிவாரணம் கிடைக்கும் என்பதும் உண்மைதான். ஆனால் டீ உங்களுக்கு தலைவலியில் இருந்து முழு நிவாரணம் தராது, எனவே காலையில் தலைவலி இருக்கும் போது டீக்கு பதிலாக கிராம்பு டீயை குடிக்க பரிந்துரைக்கிறோம். கிராம்பு டீயை தொடர்ந்து சில நாட்கள் குடித்து வந்தால், தலைவலியில் இருந்து பெருமளவு நிவாரணம் பெறலாம்.
தலைவலிக்கான கிராம்பு தேநீர்
நாம் கூறியது போல், காலை தலைவலியை முற்றிலும் போக்க, எளிய அல்லது பால் டீக்கு பதிலாக, நீங்கள் கிராம்பு டீ குடிக்க வேண்டும். ஏனென்றால், ஆயுர்வேதத்தில் கூட கிராம்பு தலைவலிக்கு இயற்கையான தீர்வாக கருதப்படுகிறது. கிராம்பு தேநீர் குடிப்பதோடு, கிராம்பு எண்ணெயைக் கொண்டு தலையை மசாஜ் செய்வதும் தலைவலியை விரைவில் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Weight Loss Tips: மெட்டபாலிஸத்தை அதிகரிக்கணுமா... நல்லா காரசாரமா சாப்பிடுங்க...!
கிராம்பு தேநீர் தயாரிப்பது எப்படி
கிராம்பு தேநீர் தயாரிக்க, முதலில் நீங்கள் ஒரு கப் தண்ணீரை எடுத்து தீயில் வைக்க வேண்டும். தண்ணீர் மெதுவாக சூடாக ஆரம்பித்ததும் அதில் 4 முதல் 5 கிராம்புகளை போட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் மூடி வைத்து 1 நிமிடம் மட்டும் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, அதில் அரை டீஸ்பூன் தேன் கலந்து சூடாக பருகவும்.
கிராம்பு தேநீரின் மற்ற நன்மைகள்
கிராம்பு டீயை காலையில் குடிப்பதால் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, பல நன்மைகளும் உள்ளன. கிராம்பு தேநீர் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடல் எட்டை குறையும். உடலில் உள்ள வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது, உடல் வலியைக் குறைக்கிறது மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. இது தவிர, சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கும் கிராம்பு தேநீர் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | கோதுமை வேண்டாம்... ‘இந்த’ சப்பாத்திகளுக்கு மாறுங்க... வெயிட் தானா குறையும்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ