நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்!

நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான உணவையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Oct 18, 2022, 05:59 AM IST
  • ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
  • நீரிழிவு நோயாளிகள் அரிசி சேர்ந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள கூடாது.
  • பழங்களுக்கு பதிலாக நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்! title=

மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பிறகிலிருந்து உணவு விஷயத்தில் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், நாம் சாப்பிடும் உணவு ரத்த சர்க்கரை அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது.  உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் உடலின் உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்படக்கூடும், அதனால் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  நீரிழிவு நோயாளிகள் முறையாக டயட்டை கடைபிடித்தால் தான் குளுக்கோஸ் அளவு சரியான அளவில் இருக்கும்.  இப்போது ஊட்டச்சத்து நிபுணர்கள் நீரிழிவு நோயாளிகள் எதையெல்லாம் சாப்பிடலாம் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று பட்டயலிட்டுள்ளனர், அதனை பின்வருமாறு காணலாம்.

1) பெரும்பாலும் காலை உணவாக அரிசி சேர்ந்த உணவு வகைகளையே எடுத்து கொள்கிறோம், இதனை சாதாரண நபர்கள் சாப்பிடலாம்.  ஆனால் நீரிழிவு நோயாளிகள் இந்த உணவு வகைகளை காலை நேரத்தில் எடுத்துக்கொள்ள கூடாது, ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது என்றும் மாறாக பாசிப்பருப்பு கலந்த உணவு வகைகளை எடுத்து கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய் அண்டாமல் இருக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!

2) கோதுமையில் செய்யும் சப்பாத்தியில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர், அதற்கு பதிலாக சோளமாவில் தயார் செய்யப்பட்ட உணவுகளை நீரழிவு நோயாளிகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.  அதேபோல கேழ்வரகில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகும் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

3) காலை உணவில் நீரிழிவு நோயாளிகள் பருப்பு மற்றும் கிரானோலா உணவுகளை எடுத்துக்கொள்வதை விட முட்டை சாப்பிடுவது நல்லது.

4) சில பழ வகைகள் இனிப்பு சுவை அதிகம் நிறைந்ததாகவும், சிலவகை பழங்கள் கார்போஹைட்ரேட் அதிகம்  நிறைந்தவையாகவும் இருக்கும், இவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக நட்ஸ் வகைகளை சாப்பிடுவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

5) நீரிழிவு நோயாளிகள் சிற்றுண்டி சாப்பிட விரும்பும்போது பிஸ்கட்டுகள் அல்லது ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், அதற்கு பதிலாக ப்ரோட்டீன் நிறைந்த ஸ்னாக்ஸ்சுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

6) சுவிங்கம் மற்றும் மிட்டாய்களில் செயற்கையான மணமூட்டிகளும், இனிப்பு சுவையும் சேர்க்கப்பட்டு இருக்கும்.  இதுபோன்ற செயற்கை இனிப்பு சுவையூட்டப்பட்ட உணவு பண்டங்களை சாப்பிடுவதால் குடல் பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News