டையட் vs உடற்பயிற்சி: உடல் எடையை குறைக்க சிறந்தது எது?

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முயற்சி செய்து  கொண்டிருப்பவர்களுக்கு டையட் சிறந்ததா? அல்லது உடற்பயிற்சி சிறந்ததா? என்ற சந்தேகம் இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2023, 05:44 PM IST
  • உடல் எடையை குறைக்க சிறந்த வழி
  • தரமான உணவு கட்டுப்பாடு சிறந்ததா?
  • உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதுமா?
டையட் vs உடற்பயிற்சி: உடல் எடையை குறைக்க சிறந்தது எது? title=

உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு நீண்ட கால நன்மைகளை உள்ளடக்கியது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உடனடியாக இதில் ரிசல்டை எதிர்பார்க்ககூடாது. உடல் எடையை குறைப்பதால் என்ன நன்மைகள் என்று பார்த்தால் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் சார்ந்த பிரச்சனைகள் இருக்காது. அத்துடன் அழகான தோற்றத்தையும் நீங்கள் பெற்றிருப்பீர்கள். 

மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் நார் சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!

உடற்பயிற்சி vs உணவு: எது மிகவும் முக்கியமானது?

சிலர் வெகு சீக்கிரமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என குறுக்கு வழிகளை எல்லாம் பயன்படுத்துவார்கள். இது பின்னாளில் மோசமான விளைவுகளை கொடுக்கும். ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளை எல்லாம் கொடுத்து, மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடும். ஆரோக்கியமான முறை என்றால் உணவுக்கட்டுப்பாடு முதன்மையான இடத்தில் உள்ளது. அத்துடன் உடற்பயிற்சியும் அவசியம்.  இரண்டும் சேரும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கும். இரண்டும் ஒருசேர முயற்சிக்கும்போது தான் நல்ல முடிவுகள் கிடைக்கும், இதில் எது சிறந்தது என்ற கேள்வி தேவையற்றது. 

உடல் எடை அதிகரிப்பது எதனால்?

நாம் தேவைக்கு அதிகமாக கலோரிகளை உட்கொள்ளும் போது எடை கூடுகிறது. எனவே, தினசரி கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது எடையைக் கட்டுப்படுத்துவதில் சந்தேகத்திற்கு இடமின்றி உதவும். இதில் இருந்து விடுபட, கட்டாயம் உடற்பயிற்சி அவசியம். உடல் எடையை குறைக்க உங்கள் கலோரி உட்கொள்ளல் அளவை குறைவாக்க வேண்டும். குறுக்கு வழிகள் எப்போதுமே ஆபத்தானது தான். இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் நீங்கள் மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுங்கள். 

மேலும் படிக்க |  இதய நோய்களை அண்டாமல் இருக்க செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News