திரிபலா நன்மைகள்: திரிபலா ஆயுர்வேதத்தின் பழமையான மற்றும் மிகவும் பயனுள்ள மருந்தாகும். கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையே திரிபலா என்று அழைக்கப்படுகிறது.
திரிபலா பல தீராத நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இந்த பதிவில், திரிபலா சாப்பிடுவதால் எந்தெந்த நோய்களை நம்மை விட்டு தூரமாக விலக்கலாம் என்பதையும் எந்தெந்த நோய்களின் சிகிச்சையில் இது பயன்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். இதை எப்படி, எந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
திரிபலா இந்த நோய்களிலிருந்து பாதுகாக்கிறது:
- திரிபலாவை உட்கொள்வதால் கண்கள் ஆரோக்கியமாகவும், பார்வை சரியாகவும் இருக்கும்.
- சரும நோய்கள் உங்களைச் சூழ முடியாது.
- ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களைத் தடுப்பதில் திரிபலா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- தொற்றுகளால் பாதிக்கப்பட்டால், திரிபலா உட்கொள்வது உங்கள் உடலை வலிமையாக்கும். நீங்கள் தொற்றால் எளிதாக பாதிக்கப்படக்கூடிய நபராக இருந்தால், திரிபலா உங்களுக்கு ஏற்றதாக இருக்கும், ஏனெனில், இது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- திருபலா செரிமானத்தை சீராக வைத்து, வாயுத்தொல்லை, அஜீரணம், புளிப்பு ஏப்பம், போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கிறது.
- திரிபலாவை தொடர்ந்து உட்கொள்வது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
- திரிபலா பொடி சருமத்தின் பொலிவை அதிகரித்து இளமையாக வைத்திருக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- இதனை உட்கொள்வதால் விரைவில் சுருக்கங்கள் ஏற்படாது.
மேலும் படிக்க | வறண்ட கண்களால் வாட்டமா? இவை காரணமாக இருக்கலாம், இப்படி தீர்வு காணலாம்
திரிபலா பயன்படுத்தும் முறை
திரிபலா சூர்ணத்தை பயன்படுத்துவதற்கான முறையானது, எந்தப் பிரச்சனையைத் தவிர்க்க அதைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் அல்லது எந்த நோய்க்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
கண்களுக்கான பயன்பாடு
- கண்கள் ஆரோக்கியமாகவும், பார்வை சரியாகவும் இருக்க, திரிபலா பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். குளிர்ந்த பிறகு, இந்த தண்ணீரை வடிகட்டி, கண்களை கழுவவும்.
- திரிபலா பொடியை பசுவின் நெய் மற்றும் தேனில் கலந்து சாப்பிட கண் திசுக்கள் மற்றும் நரம்புகள் வலுப்பெறும். உங்கள் கண்பார்வை அதிகரித்து ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தோலுக்கான பயன்பாடு
- திரிபலாவை தோலில் இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். முதலாவதாக, அதை உட்கொள்வதால் சருமத்துக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. திரிபலா பொடியை தேனுடன் தினமும் உட்கொள்ள வேண்டும். இது உங்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும் மற்றும் இளவயது முகப்பரு, தழும்புகள் போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.
- திரிபலாவை தேனுடன் கலந்து அதன் பேஸ்ட்டை சருமத்தில் தடவலாம். இது சருமத்தை ஹைட்ரேட் செய்து, சரும அமைப்பை மேம்படுத்தும். இதில் வைட்டமின்-சி அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டு, சருமத்தில் தடவினால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.
மலச்சிக்கலை போக்க
- மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், திரிபலா சூரணத்தை தவறாமல் உட்கொள்வதன் மூலம் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.
- மேலும் இது உங்கள் உடலின் ஃபிட்னஸ் அளவை பராமரிக்க உதவும்.
- இரவில் தூங்கும் முன், 5 கிராம் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளவும். பிரச்சனை அதிகமாக இருந்தால், நீங்கள் இரண்டு ஸ்பூன் இசப்கோல் மற்றும் 5 கிராம் திரிபலாவை ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். வெதுவெதுப்பான நீரில் மட்டுமே இதை உட்கொள்ளவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Cardamom Benefits: ஏலக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR