Benefits of Fennel Water: சோம்பு என்னும் பெருஞ்சீரகம் ஒரு அற்புதமான மசாலா. உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் இதில் அடங்கியுள்ள மருத்துவ பலன்கள் ஏராளம். சாப்பிட்ட பின் சோம்பை வாயில் போட்டு மெல்லும் பழக்கம் பலருக்கு இருக்கும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க இந்த பழக்கம் மிகவும் உதவும். பல மருத்துவ குணங்கள் நிறைந்த சோம்பு நீரை அதிகாலையில் குடிப்பதால் கிடைக்கும் பல நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
தினமும் வெறும் வயிற்றில் சோம்பு என்னும் பெருஞ்சீரக நீரை குடித்து வந்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். எடை குறைவது முதல் கண் பார்வை கூர்மையடைவது வரை இதில் நிரம்பியுள்ள நன்மைகள் (Health Tips) ஏராளம். மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சோம்பு என்னும் பெருஞ்சீரகம், கை வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு பொருள்.
கண் பார்வைக் கூர்மை: சோம்புத் தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், கண்களின் பலவீனம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. சோம்பிற்கு நேத்திர ஜோதி என்ற பெயரும் உண்டு. சோம்பில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கண் பர்வை கூர்மைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
செரிமானம் தொடர்பான பிரச்சனைகள்: வயிற்று உப்புசத்தைத் தணிக்கும் சோம்பு, பல்வேறு வகையான செரிமான பிரச்சினைகளையும் சீர் செய்கிறது. வாயுத்தொல்லை, வயிற்று வலி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். வயிற்று தசைகளை தளத்தும் ஆற்றலும் சோம்பிற்கு உண்டு.
உடல் பருமனை கரைக்கும் சோம்பு நீர்: வெறும் வயிற்றில் சோம்புத் நீரை குடித்தால், உடல் எடையை சீராக இருக்கும். கொழிப்பௌ எரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பதால், உடல் பருமன் குறையும்.
சுவாச நோய்களுக்கு மருந்தாகும் சோம்பு நீர்: சுவாசக் குழாயில் வீக்கம், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு சோம்பு நீரை உட்கொள்வது நிவாரணம் தரும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடையும்
வாய் துர்நாற்றத்தை போக்கும் சோம்பு நீர்: வாய் துர்நாற்றத்தை போக்குவதில் சோம்பு நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சோம்பு நீரை வாரம் இரு முறை குடித்து வந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதேபோல் சோம்பை வாயில் போட்டுக் கொண்டு தினமும் மெல்லுவதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.
மேலும் படிக்க | தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ்... உச்சி முதல் பாதம் வரை நன்மைகள் ஏராளம்
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சோம்பு நீர்: சோம்பு என்னும் பெருஞ்சீரகத்தில் தாமிரச் சத்து, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுச் சத்துக்கள் காணப்படுகின்றன. இவை சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை போக்க உதவுகிறது. சோம்பில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைத்துக் கொள்வதோடு, சருமத்தில் உள்ள மாசு மருக்களை நீக்கும்.
காலையில் எழுந்தவுடன் சோம்பு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், பல பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். ஒரு கல்லில் இரு மாங்காய் அல்ல பல மாங்காய்களை பெறலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இதற்கு பொறூப்பேற்காது.)
மேலும் படிக்க | முகத்தில் தோன்றும் ‘இந்த‘ மாரடைப்பு அறிகுறிகளை ஈஸியா எடுத்துக்காதீங்க.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ