Garlic for Health: இதயம் முதல் பாலியல் ஆரோக்கியம் வரை அருமருந்தாகும் பூண்டு..!!

பூண்டு உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் மிகவும்  சிறந்தது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2022, 06:04 PM IST
  • தினமும் காலையில் பூண்டு சாப்பிட மறக்காதீர்கள்.
  • பூண்டு சளிக்கு சக்தி வாய்ந்த மருந்தாக பயன்படுகிறது.
  • உயர் இரத்த அழுத்த பிரச்சனையை பூண்டு சரிசெய்கிறது.
Garlic for Health: இதயம் முதல் பாலியல் ஆரோக்கியம் வரை அருமருந்தாகும் பூண்டு..!! title=

சமையலில் பூண்டு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பூண்டு வாசனை பலருக்கு பிடிக்கும் என்பதன் காரணமாக பல வீடுகளில், சமைக்கும் போதும் சட்னி போன்றவற்றிலும் பூண்டு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பூண்டு உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் மிகவும்  சிறந்தது. பூண்டின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்

1. திருமணமான ஆண்களுக்கு மிகவும் சிறந்தது

அரோக்கியமான பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த பூண்டு நல்லது. பூண்டு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. அதன் காரணமாக விறைப்புத்தன்மை பிரச்சனை ஓரளவு சரி செய்யப்படுகிறது என்பது பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், பூண்டு உடலில் நைட்ரிக் ஆக்சைட்டின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக நரம்புகள் வலுவாகின்றன என்பது பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க | பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

2. குளிர் காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்

பூண்டு சளிக்கு சக்தி வாய்ந்த மருந்தாக பயன்படுகிறது. 12 வார காலம் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், பூண்டு சளி மற்றும் காய்ச்சலை 63 சதவீதம் குறைக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். உயர் இரத்த அழுத்த பிரச்சனையை பூண்டு சரி செய்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு,  அதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் பண்பு பூண்டுக்கு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

4. கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பூண்டு சிறப்பாக செயல்படுகிறது. ஒரு ஆராய்ச்சியில், சிலருக்கு பூண்டு சப்ளிமெண்ட் கொடுக்கப்பட்டு, அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையில்,  அவர்களின் கெட்ட கொலஸ்ட்ரால் அதாவது எல்டிஎல் குறைந்துள்ளது தெரிய வந்தது.

5. ஸ்டாமினாவை மேம்படுத்துகிறது

பூண்டு தடகள செயல்திறனை அதிகரிக்கவும் செயல்படுகிறது. பூண்டு தொடர்பாக பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன, அதில் பூண்டு சோர்வைக் குறைத்து ஸ்டாமினாவை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பு- ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள், இதை விட அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும்  சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)

மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News