Diet with eggs: நோயற்ற வாழ்வுக்கு தினசரி ஒரு முட்டை போதும்: எப்படி

Egg For Health: முட்டைகளை பச்சையாகவும் சாப்பிடலாம், அழகுப் பொருளாகவும் உபயோகிக்கலாம், ஊட்டச்சத்தின் உறைவிடமாக இருக்கும் முட்டையின் ஆரோக்கிய நன்மைகளின் சக்தி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 8, 2022, 08:34 AM IST
  • ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும் முட்டை டயட்
  • கோலின் சத்தின் ஒரே உறைவிடம் முட்டை மட்டுமே
  • கர்ப்பிணிகளுக்கு முட்டையின் அவசியம்
Diet with eggs: நோயற்ற வாழ்வுக்கு தினசரி ஒரு முட்டை போதும்: எப்படி title=

புதுடெல்லி: உடல் ஆரோக்கியத்திற்கு நாம் உண்ணும் காலை உணவு மிகவும் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. அது வேகவைத்த முட்டையாக இருந்தாலும் சரி அல்லது ஆம்லெட்டாக இருந்தாலும் சரி.

வெண்மையும் மஞ்சளுமாக காட்சியளிக்கும் முட்டை உடல்நலத்தை பாதுகாப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டைகளை பச்சையாகவும் சாப்பிடலாம், அழகுப் பொருளாகவும் உபயோகிக்கலாம், ஊட்டச்சத்தின் உறைவிடமாக இருக்கும் முட்டையின் ஆரோக்கிய நன்மைகளின் சக்தியின் பட்டியல் இது.

கொலஸ்ட்ராலுக்கு முட்டை
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர விரும்புபவர்களுக்கு முட்டை சரியான தேர்வாக இருக்கும். eLife இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், முட்டைகளை அளவோடு உட்கொள்வது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதய நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. 

"நல்ல" கொழுப்பு என்பது, உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) கொலஸ்ட்ரால் ஆகும், இது இரத்த ஓட்டத்தில் இருந்து மற்ற வகை கொழுப்பை அகற்ற உதவுகிறது.

மேலும் படிக்க | தப்பி தவறி கூட முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க

கண்களின் ஆரோக்கியத்திற்கு முட்டை
முட்டைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவை கண்களுக்கு மிகவும் நன்மை பயப்பவை.

இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விழித்திரையில் குவிந்து, கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைக்கிறது. இந்த இரண்டும் தான், பொதுவாக பலரை பாதிக்கும் கண் பிரச்சனைகள் ஆகும். முட்டையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது கண் ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியமானது.

 
இதய ஆரோக்கியத்திற்கு முட்டை
 முட்டைகள் உங்கள் இதயத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எல்டிஎல் கொழுப்பை சிறிது அதிகரிக்க முட்டைகள் ஒரு நல்ல மூலமாகும், இது இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும். 

கோலின் 
கோலின் சாதாரண உடல் செயல்பாடு மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். கோலின் குறைபாடு இருந்தால், தசை மற்றும் கல்லீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும். இது கர்ப்பகால சிக்கல்களை தவிர்க்கும் ஊட்டச்சத்து.

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்

உடலில் ஆரோக்கியமான கோலின் அளவை பராமரிப்பது இன்றியமையாதது. முட்டைகள் கோலினின் நல்ல மூலமாகும், மேலும் ஒரு முட்டையை சாப்பிடுவது உங்கள் தினசரி கோலின் தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்ய உதவும்.

மூளை ஆரோக்கியத்திற்கு முட்டை
உங்கள் உணவில் முட்டையைச் சேர்ப்பதன் மற்றொரு முக்கிய நன்மை, உங்கள் மூளை ஆரோக்கியம். வைட்டமின் Dஇன் வளமான ஆதாரமான முட்டைகள் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.

பொதுவாக, உணவுகளில் இருந்து வைட்டமின் டி பெறுவது கடினம், ஆனால் முட்டைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த குறையை போக்கும்.  முட்டையில் உள்ள கோலின், மூளையில் உள்ள நரம்பு செல்களான நியூரான்கள் ஒன்றையொன்று தொடர்பு கொள்ள உதவுகிறது.  கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கோலின் ஊட்டசத்து மிகவும் அவசியம்.

மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News