பொதுவாக, புத்தாண்டு பிறக்கும் போது, கோடிக்கணக்கான மக்கள் வரும் ஆண்டை சிறப்பாக மாற்ற பல்வேறு தீர்மானங்களை எடுக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ள அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் ஒரு தீர்மானம் எடுக்க நினைத்தால், உங்கள் உடலை நோய்களுக்கு ஆளாக்கும் ஒரு பழக்கத்தை கைவிடுவது தொடர்பாக உறுதி மொழி ஒன்றை எடுங்கள். ஆம், இந்த பழக்கம் தான் அதிகமாக மொபைல் போன் உபயோகிப்பது. இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோர், மொபைல்போனுக்கு அடிமையாகி விட்டனர். விருந்துக்கு சென்றாலும் சரி, பார்டிக்கு சென்றாலும் சரி, தனது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் சரி, போனை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கூட மொபைல் போன்களில் நாள் முழுக்க செலவிடுகிறார்கள். போனில் வரும் ரீல்களைப் பார்த்து கொண்டே இருந்தால், பல மணிநேரம் கடப்பது உங்களுக்குத் தெரியாது.
ஆனால் மொபைல் போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. தொலைபேசியில் பிஸியாக இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பதித்து கழுத்து வலி கை வலி ஏற்படுவதோடு மட்டுமின்றி, குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. மொபைல் போன்களில் பிஸியாக இருப்பதால், உறவுகளுக்கு நேரம் கொடுக்க முடியாமல், கருத்து வேறுபாடும், சண்டை சச்சரவுகளும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், புத்தாண்டில், உங்களது இந்த பழக்கத்தை முடிந்தவரை குறைக்க வேண்டும். இல்லையெனில், ஆரோக்கியத்தில் (Health Tips) நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தும்.
அளவிற்கு அதிகமாக ஸ்மார்ட்போனில் நேரம் செலவிடுவதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்
உடல் தோரணை பிரச்சனை:
மொபைல் போன்களில் மணிநேரம் செலவிடுபவர்கள் தோரணை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகையவர்களுக்கு கைகள் மற்றும் தோள்களில் வலி தொடர்பான பிரச்சினைகள் தொடங்குகின்றன. ஒரு கையால் மொபைலை மணிக்கணக்கில் வைத்திருப்பது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
மனச்சோர்வு பிரச்சனை:
ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் அதிகம் என்று பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. சில நேரங்களில் அடையாளம் காண்பது கடினம், ஆனால் மொபைல் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
அதிகப்படியான கோபம்:
ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எரிச்சலடையத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் கோபம் வரும். தொலைபேசியில் தொலைந்தவர்கள், மற்றவர்களுடன் உறவை பராமரிக்க முடியாமல் உறவுகளும் மோசமடையத் தொடங்குகின்றன. இது தனிப்பட்ட உறவுகளை பாதிக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
குழந்தைகளின் மூளையில் ஏற்படும் பாதிப்பு:
பிறந்தது முதல் மொபைல் பார்க்கும் குழந்தைகள், அவர்களின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது. இத்தகைய குழந்தைகள் அதிக சோம்பேறிகளாகவும், எரிச்சல் உணர்வு மிக்கவர்களாகவும் மற்றும் உடல்பயிற்சிகளில் நாட்டம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர். அளவிற்கு அதிக பயன்பாட்டால், பல குழந்தைகள் மன வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளனர். போன்களை அதிகம் பார்ப்பது குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான மனதை பாதித்து, கண்களில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
கவனச் சிதறல் பிரச்சனை:
மொபைலை அதிகம் பயன்படுத்துபவர்களால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்படிப்பட்டவர்கள் போனை மீண்டும் மீண்டும் பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள். போனில் நோடிபிகேஷன் வந்துள்ளதா என அடிக்கடி சரிபார்ப்பது ஒரு பழக்கமாகிவிட்டது. இதனால் தூக்கம் கெடும். சிலர் இரவில் போன் பயன்படுத்துவதால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ