எடை இழப்பு முதல் சிறிநீரக கல் வரை: மகத்தான நன்மைகளை தரும் மாதுளை

Health Benefits of Pomegranate: மாதுளை உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையைத் தருகிறது. மாதுளையின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 3, 2023, 02:23 PM IST
  • இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
  • எடை குறைப்பதில் நன்மை பயக்கும்.
எடை இழப்பு முதல் சிறிநீரக கல் வரை: மகத்தான நன்மைகளை தரும் மாதுளை title=

Health Benefits of Pomegranate: மாதுளை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் பழமாகும். புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி என பல வகையான சத்துக்கள் இதில் உள்ளன. இதை உட்கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதுடன், செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை அனைவருக்கும் பிடித்தமான பழமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதை எளிதாக கொடுக்கலாம். மாதுளையை உட்கொள்வதால் உடல் பலவீனம் நீங்குவது மட்டுமின்றி ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். உடலில் இருந்து வீக்கத்தை நீக்குவதோடு, நீரிழிவு நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம். இதில் உள்ள கலவைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து பல நோய்களை வராமல் காக்கின்றன. மாதுளை உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையைத் தருகிறது. இதனை உட்கொள்வதால் வாய் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளும் குறைகிறது. மாதுளையின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

மாதுளை (Pomegranate) சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மாதுளையில் உள்ள பாலிஃபீனால் கலவைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. இது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.

மேலும் படிக்க | தினமும் தலைவலி பாடாய் படுத்துதா? இவை காரணங்களாக இருக்கலாம்

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இது செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. சில ஆரம்ப ஆய்வுகளில், மாதுளை புரோஸ்டேட், மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. 

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்

மாறிவரும் பருவத்தில் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், கண்டிப்பாக மாதுளையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  மாதுளையில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை (Home Remedy For Immunity) பலப்படுத்தி பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

எடை குறைப்பதில் நன்மை பயக்கும்

மாதுளையில் ஏராளமான உணவு நார்ச்சத்து உள்ளது. இது எடையை குறைக்க (Home Remedy For Weight Loss) உதவுகிறது. மாதுளையில் கலோரி அளவு மிகவும் குறைவு. அத்தகைய சூழ்நிலையில், அதை உட்கொள்வது எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தொப்பையையும் (Belly Fat) குறைக்கிறது. மாதுளை வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். ஆகையால், தேவையற்ற,ஆரோக்கியமற்ற உணவை உண்பது தவிர்க்கப்படுகிறது. 

சிறுநீரக கல் 

மாதுளை சிறுநீரகத்தில் கற்களின் உருவாக்கத்தை தடுக்கிறது. இதில் உள்ள ஆக்சலேட் மற்றும் கால்சியம் சிறுநீரக கற்கள் (Home Remedy For Kidney Stones) உருவாவதை தடுக்கிறது. இதை உட்கொள்வது சிறுநீரக கற்களை குறைக்க உதவுகிறது.

மாதுளை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், மருத்துவருடன் கலந்தாலோசித்த பின்னரே அதை உட்கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொப்பையை குறைக்க ஒரு சுவையான வழி: பூண்டை இப்படி சாப்பிடுங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News