சிறுநீரக கற்களை தவிடுபொடியாக்கும் இளநீர்... ஊட்டச்சத்து நிபுணரின் அட்வைஸ்

சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் சிறுநீரக கற்கள், மிகவும் வேதனையை கொடுக்கக் கூடியவை. இந்த பிரச்சனையில் இருந்து  விடுபட இளநீர் உதவும் என ஊட்டச்சத்து நிபுணரான  நமியா அகர்வால் விளக்கியுள்ளார்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 12, 2024, 06:36 PM IST
  • சிறுநீரகத்தில் உருவாகும் கடினமான படிவுகள் சிறுநீரகக் கல் என்று அழைக்கப்படுகிறது.
  • சிறுநீரகத்தின் நண்பனான இளநீர்.
  • தேங்காய் நீர் சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
சிறுநீரக கற்களை தவிடுபொடியாக்கும் இளநீர்... ஊட்டச்சத்து நிபுணரின் அட்வைஸ் title=

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பானங்களை இளநீருக்கு மிக முக்கிய இடம் உண்டு. தயவு செய்து ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்த இளநீர், ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அதிசய நீர் எனலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான பானமாக இருக்கும் இளநீர் என்னும் தேங்காய் நீர் பல வகைகளில் நன்மை பயக்கும் என்றும் குறிப்பாக சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் என, ஊட்டச்சத்து நிபுணரான  நமியா அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்  கூறியுள்ளார்.

சிறுநீரகத்தில் உருவாகும்  கடினமான படிவுகள் சிறுநீரகக் கல் என்று அழைக்கப்படுகிறது. சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் இந்த சிறுநீரக கற்கள், மிகவும் வேதனையை கொடுக்கக் கூடியவை. சிறுநீரக கற்கள் வாந்தி, காய்ச்சல் போன்றவற்றை உண்டாக்குவதோடு, சிறுநீரில் இரத்த கசிவையும் ஏற்படுத்தும். இந்த பிரச்சனையில் இருந்து  விடுபட இளநீர் உதவும் என ஊட்டச்சத்து நிபுணரான  நமியா அகர்வால் விளக்கியுள்ளார்

சிறுநீரகத்தின் நண்பனான இளநீர்

சிறுநீரக கற்களுக்கு இளநீர்  அருமருந்து. இது உடலை ஹைட்ரேட் செய்து  நீர்ச்சத்து குறையாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இளநீருக்கும் உண்டு. இந்த ஆரோக்கியமான உணவு  எந்த வகையில் சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கிறது என்பதை  (Health Tips) அறிந்து கொள்ளலாம்

டையூரிக் பண்புகளை கொண்ட இளநீர்

சிறுநீரக கற்கள் தாதுக்கள் மற்றும் உப்புகளின் கடினமான படிவங்கள் ஆகும். இளநீரை வழக்கமாக குடிப்பதால், சிறுநீரகத்தில் சேரும், நச்சுப் பொருட்களை வெளியேறும். இதனால், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் பெருமளவு குறையும்.

சிறுநீரை நீர்த்துப்போகச் செய்யும் இளநீர்

இளநீரை தொடர்ந்து குடிப்பதால் சிறுநீரை நீர்த்துப்போகும். இதனால், சிறுநீரகத்தில் கற்களை உருவாக்குவதாக கருதப்படும் தாதுப் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. 

எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த இளநீர்

பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் உள்ளிட்ட எலக்ட்ரோலைட்டுகளின் சிறந்த ஆதாரமாக இளநீர் இருப்பதால், உடலில் உள்ள திரவங்களை சீராக்கி,   சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இளநீர்

தேங்காய் நீரில் உள்ள அதிக ஆக்ஸிஜனேற்றங்கள்  மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். இதனால், பல நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.

சிறுநீரக பாதிப்பை தடுக்கும் இளநீர்

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தினமும் இளநீர் அருந்துவதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரக் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில்,  இளநீர் மிக உதவியாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News