ஜூஸ் குடிச்சா இவ்வளவு நல்லதா! இனிமேல் உணவே பழச்சாறு தான்

ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் பழச்சாறுகள் இவை. பழங்களும் பழச்சாறுகளும் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகிற்கும் உகந்தவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 14, 2022, 10:04 AM IST
  • ஆரோக்கியமான வாழ்விற்கு ஜூஸ்
  • பழங்களும் பழச்சாறுகளும் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை
  • அழகிற்கும் தேவை பழங்களின் சேவை
ஜூஸ் குடிச்சா இவ்வளவு நல்லதா! இனிமேல் உணவே பழச்சாறு தான் title=

புதுடெல்லி: பல்வேறு நோய்களின் அபாயத்தைத் தணிக்க ஆரோக்கியமான பழச்சாறுகளை குடிக்கலாம். இவை, நீரிழிவு முதல் ஆஸ்துமா வரை பல நோய்களையும் தவிர்க்கச் செய்யும் அருமருந்தாகும் இனிமையான உணவுகள்.

ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் பழச்சாறுகள் இவை. பழங்களும் பழச்சாறுகளும் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகிற்கும் உகந்தவை.

பழங்கள் அல்லது காய்கறிகள் மட்டுமல்ல, ஃப்ரெஷ்ஷான ஜூஸ் குடிப்பதால், உடலும் உள்ளமும் உடனடியாக ஃப்ரெஷ்ஷாகும். புத்துணர்ச்சியைத் தரும் பழச்சாறுகள் சுவையானது மட்டுமல்ல, அவற்றில் உள்ளதாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் அவசியமானவை.

பழச்சாறுகளை குடிக்க ஆரம்பித்தவுடன், ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவில் வித்தியாசத்தைக் கண்கூடாக காணலாம்.

மேலும் படிக்க | Bipolar Disorder காரணம், அறிகுறிகள், தீர்வு: முழு விவரம் இதோ

இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறமுடியும். ஆனால், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை.

எனவே பழச்சாறு உட்கொள்வதை அதிகரிப்பது ஒன்றே, பலவிதமான முக்கியமான ஊட்டச்சத்துக்களைப் பெற ஒரு வசதியான வழியாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளை ஜூஸ் செய்யும் போது நார்ச்சத்தின் நன்மை குறைந்துவிடுகிறது என்று சொன்னாலும், ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு ஓரளவு சத்தாவது கிடைக்கிறதே என்று திருப்திபட்டுக் கொள்ளலாம்.

இந்த ஜூஸ்களை குடித்தாலும், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க | எடை குறைக்க உங்களுக்கு உதவும் மாமருந்து ‘புதினா’

ஆஸ்துமாவிற்கு பழச்சாறுகள்
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின்கள் ஏ மற்றும் டி நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது. உங்கள் தினசரி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெற, கேரட், செலரி, அன்னாசி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து ஆரோக்கியமான பழச்சாறாக குடிக்கலாம்.
 
நீரிழிவு நோய்
பழச்சாறுகளை அருந்துவதால், உடலுக்கு தினசரி பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதை எளிதாக்குகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் எந்த வகையான காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக்கொள்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாவுச்சத்து இல்லாத மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறிகள் மற்றும் நீரிழிவு நோய்க்கு உகந்த பழங்களில் கவனம் செலுத்திவேண்டும்.  

 health
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் (High blood pressure or hypertension) இளைஞர்கள் மற்றும் வயதானவர்களிடையே அதிகரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் அதிகமாக வறுத்த அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த நன்கு சமநிலையான உணவை உண்ண வேண்டும். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தங்கள் உணவில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளும் இருக்க வேண்டும். பீட்ரூட் மற்றும் இஞ்சி சேர்த்து ஜூஸாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.  

எக்ஸிமா
எக்ஸிமா (Eczema) எனப்படும் தோலழற்சி மிகவும் கொடுமையானது. தொடர்ந்து அரிப்பு, வீக்கம் மற்றும் வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் எக்ஸிமாவுக்கு சிகிச்சை ஒருபுறம் என்றால், ஜூஸ் குடிப்பது தோலழற்சி நோயை போக்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு மாதுளையால் ஆபத்தா? ஆதாயமா?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News