இரவில் பல முறை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது பலருக்கு திடீரென்று அதிக தாகம் ஏற்படுவதுண்டு. இதனால் தூக்கம் கெடுகிறது. இப்படிப்பட்ட நிலையில், வியர்வை வெளியேற ஆரம்பித்து தொண்டை வறண்டு போகும். சமீப காலங்களில் இந்த பிரச்சனை அதிகமாகி வருகின்றது. இந்த சிக்கலை லேசான பிரச்சனை என்று அலட்சியம் செய்வது ஆபத்தானது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கான காரணத்தையும் அதைத் தவிர்க்கும் வழிகளையும் இந்த பதிவில் காணலாம்.
நள்ளிரவில் ஏன் தொண்டை வறண்டு போகிறது
பகலில் தண்ணீர் குறைவாக குடிப்பது
ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதை விட குறைவாக தண்ணீர் குடித்தால், இரவில் உங்கள் உடல் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதற்கான அறிகுறிகளை அளிக்கிறது. ஆகையால், அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
தேநீர் மற்றும் காபி குடிப்பது
நம் நாட்டில் டீ-காபி குடிப்பவர்களுக்கு பஞ்சமே இல்லை. சிலரால் டீ, காபி இல்லாமல் வாழ முடியாது. ஆனால் இது உங்கள் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இதில் உள்ள அதிகப்படியான காஃபின் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறும். காஃபின் காரணமாகத்தான் உடலில் நீர்ச்சத்து குறைகிறது, இரவில் தாகம் எடுக்கிறது. காஃபின் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.
மேலும் படிக்க | ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளதா? இவற்றை குடித்தால் உடனே பலன் தெரியும்
அதிக உப்பு உட்கொள்ளல்
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மேல் உப்பை சாப்பிடக்கூடாது. இதை விட அதிக உப்பை உட்கொள்வது உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தத் தொடங்குகிறது. உப்பில் சோடியம் உள்ளது. இது நீரிழப்புக்கு காரணமாகிறது. இதனால் இரவில் தொண்டை வறண்டு போகும்.
தொண்டை வறட்சியை தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
- நாள் முழுவதும் அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்.
- உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்.
- ஃபிரஞ்சு ஃப்ரைஸ், சிப்ஸ் போன்ற எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்.
- காரமான உணவை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
- தேநீர் மற்றும் காபி அருந்துவதைக் குறைக்கவும் அல்லது தவிர்க்கவும்.
- சோடா பானங்களில் காஃபின் உள்ளது, அவற்றையும் தவிர்த்து விடுங்கள்.
- எலுமிச்சை தண்ணீர், மோர், பழச்சாறு போன்ற பானங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உணவால் வரும் வயிற்றுப் புற்றுநோய்... தவிர்ப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ