Oral Hygine: ஆரோக்கியமற்ற உணவுகள், பானங்கள், அதிகப்படியான துரித உணவுகள் ஆகியவற்றின் காரணத்தால், இந்நாட்களில் மக்களின் பல் ஆரோக்கியமும், வாய் ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கபப்டுகின்றது. ஒருவரது வாயின் ஆரோக்கியம் அவரது முழு உடலின் ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. பல்வலி, ஈறுகளில் இரத்தப்போக்கு ஆகியவை வாய்வழி பிரச்சினைகள் மட்டுமல்ல, அவை நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. இந்த தகவல் ஆச்சரியத்தை அளித்தாலும், இது உண்மை!! இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மோசமான பல் சுகாதாரம் (Dental Health) பல்வேறு நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்கின்றது. இந்த நிலை ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் பொதுவான ஒரு பிரச்சனை, இது இருந்தால், உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிக அவசியம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஈறு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஈறு நோய்கள் இருந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது.
பெரியோடொண்டல்
பெரியோடொண்டல் (Periodontal) என்பது ஈறுகள் தொடர்பான ஒரு கோளாறு ஆகும். இந்த நோய் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்குவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு கிளைசெமிக் கட்டுப்பாட்டை மோசமாக்குகிறது. இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்பது தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்கள் இன்சுலினுக்கு (ஹார்மோனுக்கு) சரியாக ஒத்துப்போக முடியாமல், இரத்தத்தில் இருந்து குளுக்கோஸை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாத நிலையாகும். இதன் விளைவாக, கணையம் அதிக இன்சுலினை உருவாக்கி குளுக்கோஸ் உங்கள் செல்களுக்குள் நுழைய உதவுகிறது. இது உடலில் உள்ள இன்சுலின் அளவுகளில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது, இது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.
மேலும் படிக்க | புற்றுநோய், கொல்ஸ்ட்ராலை ஏற்படுத்தும் சுட்ட எண்ணெய்... எச்சரிக்கும் நிபுணர்கள்!
நீரிழிவு நோய் (Diabetes) இல்லாதவர்களைக் காட்டிலும், நீரிழிவு நோயாளிகள் கடுமையான ஈறு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. வாய் ஆரோக்கியம், குறிப்பாக ஈறு நோய், நாள்பட்ட வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது இதய நோய்களுக்கான காரணமாகின்றாது. ஈறு நோய் காரணமாக வாய்வழி பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தில் நுழைகின்றன. இதன் காரணமாக தமனி பிளேக் உருவாகி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
பெரியோடொண்டல் நோய் இதய நோய்க்கான (Heart Diseases) ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. ஈறு நோயினால் ஏற்படும் அழற்சி, பாக்டீரியா மற்றும் வீக்கம் ப்ரீடியாபயாட்டீஸ் அபாயத்தை அதிகரிக்கிறது. ஈறு நோய் (Gum Disease) தொடர்ச்சியான வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தில் பரவுகிறது. இதனால் இரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி?
பல் துலக்குதல் மற்றும் ஃப்ளாசிங்
ஃவுளூரைடு பற்பசையால் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கவது (Brushing) மிக அவசியமாகும். மேலும் தினமும் ஃப்ளோஸ் (Flossing) செய்வது பிளேக்கை குறைக்கிறது. இது பாக்டீரியா பரவுவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக ஈறு ஆரோக்கியம் பாதிகாக்கப்படுகின்றது.
சமச்சீர் உணவு
சர்க்கரை மற்றும் அமில உணவுகளை குறைப்பது மிக அவசியமாகும். மேலும், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீர் உணவை (Balanced Diet) உட்கொள்வது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பல் பரிசோதனைகள்
பற்கள் மற்றும் ஈற்களில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய, அவ்வப்போது பல் பரிசோதனைகளை (Dental Check Up) செய்துகொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை உடனே குறைக்கணுமா? இந்த உணவுகள் பக்கமே போகாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ