சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த டிப்ஸ்: சர்க்கரை நோய் என்பது இன்றைய காலத்தில் ஒரு பொதுவான நோயாக மாறி வருகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல என்றாலும், வழக்கமான சில பழக்கங்களைச் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். மறுபுறம், சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் என்ன குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்கவும்
உங்களுக்கு நீரிழிவு இருந்தால், இரத்த சர்க்கரை அளவை தினமும் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். இந்த பழக்கத்தை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் உணவுக்கு முன் சர்க்கரை அளவை சரிபார்க்கவும். அதேபோல் நீங்கள் உடற்பயிற்சி செய்தால், உடற்பயிற்சிக்குப் பிறகு சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருந்தை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். ஏனெனில், சரியான நேரத்தில் மருந்து சாப்பிடாதவர்களின் சர்க்கரை அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். இது உங்களுக்கு சிக்கலை கொடுக்கலாம். எனவே, சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
நடை பயிற்ச்சியை மேற்கொள்ளலாம்
உடல் செயல்பாடு மூலம் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம். அதனால்தான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இதற்கு தினமும் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். மறுபுறம், நீங்கள் ஒரு அலுவலகப் பணியாளராக இருந்தால், லிப்ட்டுக்குப் பதிலாக படியைப் பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியமான இரவு உணவை உண்ணுங்கள்
இரவு உணவில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான இரவு உணவை உண்ணுங்கள். இதற்கு பச்சை பீன்ஸ், கீரை, ப்ரோக்கோலி போன்றவற்றை இரவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ