விரைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? உங்களுக்கான டையட் டிப்ஸ்

உடல் எடையை கூட்ட வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் இந்த டையட்டை ஃபாலோ செய்தால், பாசிட்டிவான ரிசல்ட் கிடைக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 13, 2022, 05:15 PM IST
விரைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? உங்களுக்கான டையட் டிப்ஸ் title=

உடல் எடை அதிகமாக இருந்தாலும் பிரச்சனை, எடை குறைவாக இருந்தாலும் பிரச்சனை. சீராக உடல் எடையை பராமரிப்பது தான் ஆரோக்கியம். அது என்ன சீரான உடல் எடை? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். சீரான எடை என்றால் உயரத்துக்கு ஏற்ற எடை இருந்தால் போதும். சிலர் உடல் எடையை கூட்டுவதற்கு ஏதோதோ முயற்சிகளை எல்லாம் எடுப்பார்கள். அவர்களில் ஒருவர் நீங்கள் என்றால், இயற்கையான இந்த டிப்ஸை ஃபாலோ செய்து விரைவாக உடல் எடையை கூட்டுங்கள்.

1. பாதாம் பருப்பு

டிரைப்ரூட்களில் ஒன்றான பாதாம் பருப்பில் நரம்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு. இதில் வைட்டமின் இ சத்து, ஃப்ளேவனாயிட்ஸ், எல் கார்னிடைன் அமினோ அமிலம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. உடல் எடையை கூட்டும் முயற்சியில் இருப்பவர்கள் தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் இதனை சாப்பிட்டு வருவது, நல்ல ரிசல்டைக் கொடுக்கும். பாஸ்பரஸ் தாதும் இதில் இருக்கிறது. 

ALSO READ | Olive Oil Benefits: நீண்ட ஆயுள் வேண்டுமா? தினமும் 7 கிராம் ஆலிவ் எண்ணெய் செய்யும் அற்புதம்!

2. வேர்க்கடலை

உடல் எடையைக் கூட்டும் முயற்சியில் இருப்பவர்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்றால் வேர்க்கடலை. நல்ல கொழுப்பு நிறைந்துள்ள வேர்க்கடலையில் பாதாம் பருப்புக்கு இணையான சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. லோ பட்ஜெட் பாதாம் என்று கூட இதனை அழைக்கலாம். அதிக விலை கொடுத்து பாதாம் வாங்க முடியாதவர்கள் வேர்கடலையை டையட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

3. பிஸ்தா

வைட்டமின்கள் பி, இ ஊட்டசத்துக்கள் இருக்கும் பிஸ்தாவில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீஷியம் உள்ளிட்டவையும் உள்ளன. இதனை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். நாள்தோறும் மூன்று முதல் 4 பிஸ்தா பருப்புகளை சாப்பிடுங்கள்

4. உலர் திராட்சை

ஆன்டிஆக்ஸிடன்டுகளும், உடலுக்கு தேவையான கலோரிகளையும் கொண்டிருக்கிறது உலர் திராட்சை. இரும்புச் சத்துகளின் குவியலாக இருக்கும் இதனை உடல் எடையை கூட்டுபவர்களுக்கு சிறந்த ஒன்று. சரியான அளவில் எடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களின் உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

ALSO READ | ALSO READ | தாய்ப்பாலுக்கும் கோவிட் நோய்க்கும் உள்ள தொடர்பு

5. வால்நட்

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மன அழுத்தங்கள் இருக்கக்கூடாது. ப்ரீயாக மனதை வைத்திருக்க வேண்டும். இதற்கு மூளை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டிய உணவை சாப்பிட வேண்டும். அந்தவகையில் வால் நட் சிறந்தது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தங்கள் ஏற்படாது. உடல் எடையும் கூடும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News