தற்போது கோடை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பலரும் வெயிலை தணித்துக் கொள்ள குளிர்ந்த நீரைக் குடிப்பதும், குளிர்பானங்களை அருந்துவதுமாக உள்ளனர்.
கோடையை சமாளிப்பதற்கு பலரும் பல்வேறு முறைகளைக் கையாள்வோம். கோடையில் உடலை பாதுகாக்க பழங்களில் இருக்கும் நீர்த்தன்மையும், சுவையும் கோடைக்கு நல்ல வரப்பிரசாதமாக அமையும்.
பழங்களையும், பழச்சாறுகளையும் அவ்வப்போது சாப்பிடுவதால் வியர்வையால் உடல் இழக்கும் நீர் ஈடு செய்யப்படுகிறது.
நாம் வீட்டில் ஆரஞ்சு பழம், திராட்சை போன்றவற்றை சாறு பிழிந்து குடிப்பதன் மூலம், வெளியில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட குளிர்பானங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்கலாம். திராட்சை பழச்சாறு கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கும். .
அதுபோல வெறும் மோரைச் செய்து குடிக்காமல், மோரில் சிறிது கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிச் சேர்த்து குடிப்பது நல்லது.
உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். இளநீர், பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ச்சத்தைச் சரியாகப் பராமரித்தா அம்மை நோய்களைத் தவிர்க்கலாம்