வெள்ளை முடியால் அவஸ்தையா? ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேருங்கள்..

Hair Care Tips Tamil : தலையில் அதிகமாக வெள்ளை முடி வளர்வதை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் தவிர்க்கலாம். அவை என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 4, 2024, 04:32 PM IST
  • தலைமுடி வெள்ளையாவதை தவிர்க்க டிப்ஸ்
  • டயட் உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள்
  • இதனால் என்ன பயன் ஏற்படும்?
வெள்ளை முடியால் அவஸ்தையா? ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேருங்கள்.. title=

Hair Care Tips Tamil : பலருக்கு இளநரை என்பது பெரிய பிரச்சனையாக இருக்கும். இதனால், இவர்களுக்கு மிக இளம் வயதிலேயே வயதானது போன்ற தோற்றம் ஏற்பட்டு விடும். இது, வைட்டமின் குறைபாடுகள், மரபியல் குறைபாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்படும். முடியை நன்றாக பராமரிப்பது, ஷாம்பூ தேய்த்து தலைக்கு குளிப்பதோடு மற்றும் நின்று விடாது. அதை தவிர்த்து நாம் என்ன சாப்பிடுகிறோம், நமது வாழ்வியல் முறை என்ன என்பதை வைத்தும் அமையும். தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை வைத்தும் நமது முடி பராமறிப்பானது அமையும். நமது டயட்-லைஃப்ஸடைலை மாற்றினால் கண்டிப்பாக இள நரையை தவிர்க்கலாம் என சில தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன தெரியுமா?

சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

சர்க்கரை வள்ளிக்கிழங்கை Sweet Potato என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இதில் பீட்டா கெரடீன் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்து முடி ஆரோக்கியத்திற்கு உதவுவதாகும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு முடி வளர்ச்சிக்கு உதவி, முடி இழப்பை தவிர்ப்பதோடு மட்டுமன்றி முடி வறட்சி ஆகாமலும் தடுக்குமாம். இது குறித்து பேசும் மருத்துவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள சத்துக்களால் முடி மிருதுவாகி வலுவாகும் என குறிப்பிடுகின்றனர். 

சுருள் பாசி:

சுருள் பாசியில் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ்கள் நிறைந்துள்ளது. அது மட்டுமன்ரி, வைட்டமின் சத்துகளும் மினரல் சத்துக்களும் நிறம்பியிருக்கின்றன. இது, உச்சந்தலையை பாதுகாப்பதோடு மட்டுமன்றி முடியின் ஆழம் வலுவடையவும் உதவுகிறது. இது, ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாப்பது மட்டுமன்றி, முகம் தெளிவாக தோன்றவும் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மஞ்சள்:

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் உள்ளன. இது, முடி நரைத்து போவதற்கு காரணமாக இருக்கும் அடுக்குகளை எதிர்த்து போராடுகிறது. இதனால் முடி நரைக்காமல் பாதுகாக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

அவகேடோ:

அவகேடோ பழத்தில் வைட்டமின் ஈ சத்து அதிகளவில் உள்ளது. இது, முடியை ஆழம் வரை சென்று பாதுகாத்து உச்சந்தலையை அதிக முடி வளர ஏதுவானதாக மாற்றுகிறது. இதனால் முடி மிருதுவாகவும் மாறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | எடை இழப்புக்கு காரணமான புரத உணவுகள்! உலக உடல் பருமன் தினத்தில் இனிப்புச் செய்தி!

அரிசி ஊற வைத்த நீர்:

அரிசி ஊற வைத்த நீரை தலை முடிக்காக உபயோகிக்கும் வழிமுறை, பல நாட்களாக நடைப்பெற்று வருகிறது. இது, முடி வளர்ச்சிக்கு உதவி முடி நரைப்பதையும் தவிர்ப்பதாக இதனால் பயன்பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் சத்துகள் இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த முடி வளர்ச்சிக்கும் நன்மை என இதை பயன்படுத்தியவர்களிடையே நம்பிக்கை உள்ளது. 

கருப்பு எள் விதைகள் :

கருப்பு எள்ளில் இரும்பு சத்துகளும், வைட்டமின் சத்துகளும் அதிகளவில் நிரம்பியுள்ளது. இதனை சாலட், தயிர், சாதம் உள்பட பல்வேறு உணவு பொருட்களில் கலந்து உபயோகிக்கலாம். முடியை நரைக்கச்செய்யும் செல்களை எதிர்த்து போராடும் சக்தி, கருப்பு எள்ளில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

கவனிக்க வேண்டியவை..

மேற்கூறியவை பலருக்கு பயனுள்ளவையாக இருந்தாலும், ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு வகையில் மாறுபடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகையால், இந்த பொருட்களால் ஏற்படும் விளைவுகளை தெரிந்து கொண்ட பின்பு இவற்றை உபயோகிப்பது நல்லது. 

மேலும் படிக்க | பிளாட் வயிறு, நச்சுனு இடுப்பு, ஒல்லியான உடம்பு வேண்டுமா... இதை செய்யுங்கள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News