India COVID-19 Update: 3 மாதங்களில் மிக குறைந்த அளவாக 36,470 புதிய பாதிப்புகள்..!!!

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) மூன்று மாதங்களில் மிகக் குறைந்த அளவாக ஒரே நாளில் 40,000 க்கும் குறைவான COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2020, 01:27 PM IST
  • இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) மூன்று மாதங்களில் மிகக் குறைந்த அளவாக ஒரே நாளில் 40,000 க்கும் குறைவான COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு 7 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
  • நாட்டில் இதுவரை பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை 1,19,502.
India COVID-19 Update: 3 மாதங்களில் மிக குறைந்த அளவாக 36,470 புதிய பாதிப்புகள்..!!! title=

புதுடெல்லி: இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) மூன்று மாதங்களில் மிகக் குறைந்த அளவாக ஒரே நாளில் 40,000 க்கும் குறைவான COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 36,470 பேருக்கு, புதிதாக  COVID-19 நோய்த்தொற்று  ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதே போன்று, பதிவாகியுள்ள புதிய இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 500  என்ற எண்ணிக்கைக்கு குறைவாக உள்ளது. இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 488 புதிய உயிரிழப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 1,19,502 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் COVID-19 மொத்த பாதிப்பு எண்ணிக்கை இப்போது 79,46,429 ஆக உள்ளது, இதில் 72,01,070 பேர் COVID-19 நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். தேசிய அளவில் குண்மடையும் விகிதம் இப்போது 90.62 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு 7 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. இன்றைய தேதியில் 6,25,857 ஆக்டிவ் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 7.88 சதவிகிதம் ஆகும்.

ALSO READ | தீபாவளிக்கு Shopping சென்று தீரா வலியை free-யாக பெறாதீர்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை.

இந்தியாவின் கோவிட் -19  தொற்று நோயாளிகள் எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23ம் தேதி 30 லட்சத்தையும் செப்டம்பர் 5 அன்று 40 லட்சத்தையும் தாண்டியது. மேலும், செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும், செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும் அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும் தாண்டியது.  

நாட்டில் இதுவரை பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை 1,19,502. இதில் மகாராஷ்டிராவில் 43,348, தமிழ்நாட்டில் 10,956, கர்நாடகாவில் 10,947, உத்தரப்பிரதேசத்தில் 6,904, ஆந்திராவில் 6,606, மேற்கு வங்கத்தில் 6,546, டெல்லியில் 6,312, பஞ்சாபில் 4,125 குஜராத்தில் 3,690  இறப்புகள் பதிவாகியுள்ளது.

அக்டோபர் 26 வரை மொத்தம் 10,44,20,894 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் நேற்று மட்டும், 9,58,116பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன எனவும் ICMR கூறியுள்ளது. இறந்தவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள், கொரோனா தொற்றுடன் வேறு நோயும் இருந்ததால், ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ | Good News: கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News