எச்சரிக்கை தகவல்! வெந்நீரில் குளிப்பதால் விந்தணுக்களில் பாதிப்பு உண்டாகும் ...!!

குளிர்காலத்தில் வெந்நீர் குளிப்பது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். எனினும் வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் சில தீவிர பக்க விளைவுகளை  பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 29, 2021, 10:18 AM IST
  • வெந்நீரில் குளிப்பதால் சருமம் வறண்டு போவது மட்டுமின்றி, முகப்பரு பிரச்சனையும் அதிகரிக்கும்.
  • சூடான நீரில் குளிப்பது ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை பாதிக்கும்.
  • கூந்தலில் கெரட்டின் புரதம் உள்ளது.
எச்சரிக்கை தகவல்! வெந்நீரில் குளிப்பதால் விந்தணுக்களில் பாதிப்பு உண்டாகும் ...!! title=

 

பெரும்பாலானோர் குளிர்காலத்தில் குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்துகின்றனர். சிலர் கோடைக் காலத்திலும் சோர்வை நீக்க வெந்நீரில் குளிப்பார்கள். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படும். இந்த செய்தியில் வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

குளிப்பது என்பது தினசரி வேலை. குளிப்பதால், புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் நீங்கள் குளிப்பதற்கு என்ன வகை தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்? என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில், வெந்நீரில் குளிப்பதால், சில உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

ALSO READ | Brain Health: மூளையை டேமேஜ் செய்யும் ‘4’ ஆபத்தான பழக்கங்கள்..!!

வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்:

1. விந்தணு எண்ணிக்கையில் பாதிப்பு

மிகவும் சூடான நீரில் குளிப்பது ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிகவும் சூடான தண்ணீரில் குளிப்பதால், விந்தணுக்களின் எண்ணிக்கையும், விந்தணுக்களின் தரமும் குறைவதால் பாலின ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

2. முடி உதிர்தல் 

கூந்தலில் கெரட்டின் புரதம் உள்ளது. இது முடியை வலுவிழக்காமலும் உடையாமலும் பாதுகாக்கிறது. ஆனால் வெந்நீரில் குளித்தால், முடி வலுவிழந்து உடையும். இதன் காரணமாக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது ஆண்களுக்கு வழுக்கையையும் உண்டாக்கும்.

3. தோல் வறட்சி மற்றும் அரிப்பு

வெந்நீரில் குளிப்பதால் தோல் வறட்சி மற்றும் தோலில் அரிப்பு போன்றவை ஏற்படலாம். ஏனெனில், வெந்நீர் அழுக்கு மற்றும் தூசியுடன் சருமத்தை பாதுகாக்கும் ஈரப்பதத்தையும் நீக்குகிறது. இதன் காரணமாக, தோல் வறண்டு போகத் தொடங்குகிறது. மேலும், இதனால் அரிப்பும் ஏற்படலாம்.

4. கண்களில் வறட்சி

வெந்நீர் சருமத்தின் ஈரப்பதத்தை மட்டுமின்றி கண்களின் ஈரப்பதத்தையும் பாதிக்கிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு, கண்களில் அரிப்பு பிரச்னை ஏற்படும். இது தவிர வெந்நீரில் குளித்தால் கண் சிவத்தல் பிரச்சனையும் வரலாம்.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

5. முகப்பரு

குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால் சருமம் வறண்டு போவது மட்டுமின்றி, முகப்பரு பிரச்சனையும் அதிகரிக்கும். அதிகப்படியான வெந்நீர் முகப்பரு பிரச்சனைகளை அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் சூடான தண்ணீர் குளிக்க விரும்பும் அதே நேரத்தில், பக்க விளைவுகளை தவிர்க்க, நீங்கள் மிதமான சூடு உள்ள அல்லது வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதன் மூலம் மேலே கூறப்பட்டுள்ளது போன்ற உடல் நல பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

( பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான் விழிப்புணர்வு நோக்கத்திற்கான மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News