கொரோனா தடுப்பு மருந்துக்கு Moderna நிறுவனம் நிர்ணயித்துள்ள விலை என்ன தெரியுமா

ஜெர்மன் வார இதழான வெல்ட் ஆம் சோன்டாக்குடன் பேசிய பார்சல், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் விலை, அரசாங்கங்கள் உத்தரவிடும் அளவுகளைப் பொறுத்து இருக்கும் என்று தெரிவித்தார்.

Last Updated : Nov 22, 2020, 03:39 PM IST
  • ஒரு டோஸுக்கு ரூ. 1855 (அமெரிக்க டாலர் 25) முதல் ரூ .2755 (அமெரிக்க டாலர் 37) விலை-மாடர்னா.
  • கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து COVID-19 ஐத் தடுப்பதில் 94.5% பயனுள்ளதாக இருக்கும்-மாடர்னா.
  • ஜூலை முதல் ஐரோப்பிய ஒன்றியமும் மோடெர்னாவும் கோவிட் -19 தடுப்பு மருந்துக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கொரோனா தடுப்பு மருந்துக்கு Moderna நிறுவனம் நிர்ணயித்துள்ள விலை என்ன தெரியுமா

மாடர்னாவின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் பான்செல் சனிக்கிழமையன்று தனது நிறுவனம் கோவிட் -19 தடுப்பு மருந்துக்கு, நாடுகளின் அரசாங்கங்களிடமிருந்து ஒரு டோஸுக்கு ரூ. 1855 (அமெரிக்க டாலர் 25) முதல் ரூ .2755 (அமெரிக்க டாலர் 37) வரை வசூலிக்கும் என்று கூறினார்.

ஜெர்மன் வார இதழான வெல்ட் ஆம் சோன்டாக்குடன் பேசிய பார்சல், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் விலை, அரசாங்கங்கள் உத்தரவிடும் அளவுகளைப் பொறுத்து இருக்கும் என்று தெரிவித்தார்.

"எங்கள் தடுப்பு மருந்துக்கு ஒரு காய்ச்சல் தடுப்பு மருந்துக்கான செலவுதான் ஆகும். காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் $ 10 முதல் $ 50 என்ற விலையில் கிடைக்கின்றன" என்று அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் கூறியது.

முன்னதாக, கொடிய வைரஸ் நோய்க்கான தடுப்பு (Corona Vaccine) மருந்தை வாங்குவதற்காக மாடர்னாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஐரோப்பிய ஆணையம் மோடெர்னாவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். ஒரு டோஸுக்கு $ 25-க்கு குறைவாக வாங்க தாங்கள் எண்ணுவதாகவும் அவர் தெரிவித்தார்.

"எதுவும் இதுவரை கையெழுத்திடப்படவில்லை. ஆனால் நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்துடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளோம். நாங்கள் ஐரோப்பாவிற்கு தடுப்பு மருந்தை விரைவில் வழங்க விரும்புகிறோம். அதற்கான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்" என்று பான்செல் வாம்ஸிடம் கூறினார். விரைவில் இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: COVID-19 தடுப்பூசி பரிசோதனையில் பாதகமான நிகழ்வா.. Bharat Biotech கூறுவது என்ன..!!

மாடர்னாவின் கூற்றுப்படி, அதன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து COVID-19 ஐத் தடுப்பதில் 94.5% பயனுள்ளதாக இருக்கும். அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இந்த கூற்று, இறுதி கட்ட மருத்துவ பரிசோதனையின் இடைக்கால தரவுகளின் அடிப்படையில் வந்துள்ளது.

மாடர்னாவுக்கு (Moderna) சில நாட்களுக்கு முன்பு மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் (Pfizer)அதன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தும் 95% பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியது.

ஜூலை முதல் ஐரோப்பிய ஒன்றியமும் மோடெர்னாவும் கோவிட் -19 தடுப்பு மருந்துக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறியப்படுகிறது.

ALSO READ: Alert: Corona Virus உடலை விட்டு சென்றாலும், அதன் பக்க விளைவுகள் நமக்கு ஆபத்தாக இருக்கலாம்…

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News