வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் ஜவ்வரிசி

Javvarisi Health Benefits:பார்ப்பதற்கு முத்துக்கள் போல் பளபளளவென இருக்கும் ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்  நிறைந்துள்ளது. ஜவ்வரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 26, 2024, 01:38 PM IST
  • ஜவ்வரிசி உணவுகளை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்.
  • குறைந்த கலோரி கொண்ட ஜவ்வரிசி, உங்கள் எடை இழப்பு முயற்சியை எளிதாக்கும் சிறந்த உணவு.
  • ஜவ்வரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.
வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் ஜவ்வரிசி title=

பார்ப்பதற்கு முத்துக்கள் போல் பளபளளவென இருக்கும் ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்  நிறைந்துள்ளது. ஜவ்வரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும். ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டுவதோடு மட்டுமின்றி செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். புரோட்டின் நிறைந்திருப்பதோடு, கலோரிகளின் அளவும் மிகக் குறைவு.  எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசி உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ஜவ்வரிசி உணவுகளை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் (Javvarisi Health Benefits)

ஜவ்வரிசியில் காணப்படும் அனைத்து கூறுகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்பது ஆச்சர்யமான, ஆனால் அதே சமயத்தில் மறுக்க முடியாத உண்மை. இதில்  புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் மட்டுமல்லாது, வைட்டமின் கே, இரும்புச் சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளது. ஜவ்வரிசியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்த பிறகு, நீங்களும் தொடர்ந்து அதனை பயன்படுத்தத் தொடங்குவீர்கள் என்பது நிச்சயம். 
ஜவ்வரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரொக்கிய நன்மைகள்

1.  குறைந்த கலோரி கொண்ட ஜவ்வரிசி, உங்கள் எடை இழப்பு முயற்சியை (Weight Loss Tips) எளிதாக்கும் சிறந்த உணவு. உடல் பருமனிலிருந்து விடுபட ஜவ்வரிசி உப்புமா, ஜவ்வர்சி கிச்சடி ஆகியவற்றை சாப்பிடலாம்

2. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜவ்வரிசி உதவும். ஏனெனில், இதில் எலும்புகளை வலுப்படுத்த தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.  மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறவும் உதவும்

3. உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி, இதயம் ஆரோக்கியமாக இருக்க ஜவ்வரிசி உதவுகிறது. இதனை உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால், இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

4.  ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு சிறந்த உணவாக இருக்கும். இவற்றில் உள்ள வைட்டமின் கே மூளை வளர்ச்சிக்கு தேவை. கருவில் இருக்கு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிஅக்வும் நல்லது.

5. காலை உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இதில் உள்ள கார்போஹைட்ரேட் ஆற்றலை அள்ளி வழங்குகிறது. 

6. ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் அளவையும், சிவப்பு இரத்த அணுக்கள் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது. ஜவ்வரிசி உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.

7. வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட ஜவ்வரிசி உணவுகள் உதவும்.

8. உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உங்கள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் ஜவ்வரிசி உதவும்.

9.  உயர் இரத்த அழுத்த நோயாளிகள், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

 

Trending News